Home /News /entertainment /

ஜி.வி. பிரகாஷின் பேச்சுலர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜி.வி. பிரகாஷின் பேச்சுலர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

முந்தைய படங்களில் மோசமான விமர்சனங்களுக்கு ஆளான ஜி.வி.பிரகாஷ், இந்த படத்தில் காதல், கோபம், இயலாமை என பல உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தி ஸ்கோர் செய்துள்ளார்.

    ஜி.வி. பிரகாஷ் - திவ்ய பாரதி நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    பேச்சுலர் திரைப்படம் கடந்த மாதம் 3-ம்தேதி திரைக்கு வந்தது. கோவையிலிருந்து பெங்களூரு வரும் இளைஞர் ஜி.வி. பிரகாஷுக்கு, அங்கிருக்கும் நண்பரின் தோழி சுப்பு (திவ்யபாரதி )மீது ஈர்ப்பு ஏற்பட்டு இருவரும் லிவ்-இன் முறையில் வாழ்ந்து வருகின்றனர்.

    ஒரு கட்டத்தில் சுப்பு தான் கர்ப்பமாக இருப்பதாக கூற, அதை கலைக்குமாறு ஜி.வி.பிரகாஷ் வற்புறுத்துகிறார். பின்னர் என்ன ஆனது என்பதுதான் பேச்சுலர் படத்தின் கதை.

    முந்தைய படங்களில் மோசமான விமர்சனங்களுக்கு ஆளான ஜி.வி.பிரகாஷ், இந்த படத்தில் காதல், கோபம், இயலாமை என பல உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தி ஸ்கோர் செய்துள்ளார். நாயகி திவ்யபாரதியும், கேரக்டருக்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளார்.

    இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ள பேச்சுலர் திரைப்படம் ஜனவரி 21-ம்தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    நடிப்பு இசை என 2 துறையிலும் ஜி.வி.பிரகாஷ் மிகவும் பிஸியாக உள்ளார். நடப்பாண்டில் மட்டும் அவருக்கு ஐங்கரன், செல்பி, ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே, 4ஜி, காதலை தேடி நித்யா நந்தா, காதலிக்க யாருமில்லை உள்ளிட்ட படங்கள் கைவசம் உள்ளன.
    Published by:Musthak
    First published:

    Tags: Sony

    அடுத்த செய்தி