• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • GV Prakash: ஜி.வி.பிரகாஷின் ஐங்கரனுக்கு விடுதலை - சோனிலிவில் வெளியாகிறது!

GV Prakash: ஜி.வி.பிரகாஷின் ஐங்கரனுக்கு விடுதலை - சோனிலிவில் வெளியாகிறது!

ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ்

பல வருடங்களாக பெட்டிக்குள் இருந்த ஜீவி.பிரகாஷின் ஐங்கரன் திரைப்படத்தை சோனிலிவ் ஓடிடி தளம் வெளியிடுகிறது.

  • Share this:
    அதர்வா நடித்த ஈட்டி படத்தை இயக்கிய ரவி அரசு ஜீ.வி.பிரகாஷை வைத்து இயக்கிய படம் ஐங்கரன். இதில் பொறியல் பட்டதாரியாக ஜீ.வி.பிரகாஷ் நடித்துள்ளார். நாயகி மகிமா நம்பியார். 2017-ல் தொடங்கப்பட்ட இந்தப் படத்தை காமன்மேன் நிறுவனம் தயாரித்தது. பல்வேறு காரணங்களால் தாமதமாக தயாரான படம், இத்தனை ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்தது. அதற்கு விடுதலை அளிக்க முன்வந்துள்ளது சோனிலிவ் ஓடிடிதளம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஐங்கரனை சோனிலிவ் தளத்தில் நேரடியாக வெளியிட உள்ளனர். இந்த தளத்தின் தமிழ் சினிமா ஒருங்கிணைப்பாளராக தயாரிப்பாளர் தனஞ்செயன் உள்ளார். அவர் பதவியேற்றபோதே, இப்படி பெட்டிக்குள் இருக்கும் பல படங்கள் வெளியுலகை காணும் என கோடம்பாக்க விமர்சகர்கள் ஆருடம் கூறினர். அதன்படி கார்த்திக் நரேன் இயக்கத்தில் தயாராகி பல வருடங்களாக வெளியாகாமலிருந்த நரகாசூரன் சோனிலிவ்வில் ஆகஸ்ட் 13 வெளியாகிறது. இப்போது ஐங்கரன்.

    வரும் 30-ஆம் தேதி ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திட்டம் இரண்டு படத்தை சோனிலிவ் நேரடியாக வெளியிடுகிறது. அதையடுத்து ஆகஸ்ட் 13 நரகாசூரன். விரைவில் ஐங்கரன் வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்படும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: