GV Prakash: சாலையோரம் நாதஸ்வரம் வாசிப்பவரை கண்டறிய உதவி கேட்கும் ஜி.வி.பிரகாஷ்!

ஜி.வி.பிரகாஷ்

சினிமாவை தவிர, பொதுப்பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பதிலும், திறமைகளை கண்டறிந்து வாய்ப்பு வழங்குவதிலும் ஜி.வி.பிரகாஷ் தனது தனித்தன்மையை வெளிப்படுத்தி வருகிறார்.

  • Share this:
    சாலை ஓரம் நாதஸ்வரம் வாசித்து உதவி கேட்கும் ஒருவரின் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இவரை கண்டறிய உதவினால் அவரது திறமையை தனது படங்களில் பயன்படுத்தி கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இசையமைப்பாளராக இருந்து நடிகரானவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே, ஜெயில், 4ஜி, காதலிக்க யாருமில்லை, பேச்சிலர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதோடு சூர்யாவின் வாடிவாசல், தனுஷின் 43-வது படம் ஆகியவற்றிற்கு இசையமைத்தும் வருகிறார்.



    சினிமாவை தவிர, பொதுப்பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பதிலும், திறமைகளை கண்டறிந்து வாய்ப்பு வழங்குவதிலும் ஜி.வி.பிரகாஷ் தனது தனித்தன்மையை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் சாலையோரம் நாதஸ்வரம் வாசிப்பவரின் வீடியோவை ட்விட்டரில் பதிவிட்ட இணையவாசி ஒருவர், இவரது வாசிப்பையும், இருக்கும் நிலைமையையும் பாருங்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதைப் பார்த்த ஜி.வி.பிரகாஷ், ”இந்த நபரை கண்டுபிடிக்க முடிந்தால், நாம் அவரை பாடல் பதிவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்புகள் மிக திறமையாகவும், துல்லியமாகவும் இருக்கின்றன” எனக் குறிப்பிட்டு அந்த வீடியோவை ரீ-ட்வீட் செய்திருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: