ஜி.வி.பிரகாஷ், பாரதிராஜா இணையும் புதிய திரைப்படம்...!
ஜி.வி.பிரகாஷ், பாரதிராஜா இணையும் புதிய திரைப்படம்...!
ஜி.வி.பிரகாஷ்
GV Prakash Kalvan Movie Update | இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார். படத்துக்கு கள்வன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படம் காடும் காடு சார்ந்த பகுதிகளிலும் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
பாரதிராஜா படம் இயக்குவதை நிறுத்திவிட்டு தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். சென்ற வருட இறுதியிலும் அவர் நடிப்பில் ராக்கி திரைப்படம் திரைக்கு வந்தது. இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழில் அதிக திரைப்படங்களில் நடிக்கும் நாயகர்களில் ஜி.வி.பிரகாஷும் ஒருவர். விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, பிரபுதேவா ஆகியோருக்கு அடுத்தபடியாக ஜி.வி. பிரகாஷ் அதிக படங்களில் நடிக்கிறார். அவர் நடிக்கும் புதிய படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிக்கிறது. இவர்கள் ஜி.வி. பிரகாஷ் நடித்த பேச்சிலர் திரைப்படத்தை தயாரித்தவர்கள்.
இந்தப் புதிய படத்தை அறிமுக இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார். படத்துக்கு கள்வன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படம் காடும் காடு சார்ந்த பகுதிகளிலும் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. காட்டை மையப்படுத்திய கதை என்பதால் காடு சார்ந்த பகுதிகளில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர். அதற்கான லொகேஷன் பார்க்கும் பணிகள் நடந்து வருகிறது. படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.
எழுத்தாளர் சந்திரா இயக்கியிருக்கும் திரைப்படத்திற்கு கள்ளன் என்று பெயர் வைத்துள்ளனர். கரு.பழனியப்பன் இதில் நாயகனாக நடித்துள்ளார். அந்த படம் விரைவில் வெளிவரும் நிலையில் ஜிவி பிரகாஷ் படத்திற்கு கள்வன் என பெயர் வைத்துள்ளனர். கள்ளனுக்கும், கள்வனுக்கு ஒரு எழுத்துதான் வித்தியாசம். பெயர் குழப்பம் ஏற்படும் என சந்திரா தரப்பு கருதினால், கள்வன் பெயருக்கு சிக்கல் வரலாம். படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் பிற விவரங்களை விரைவில் வெளியிடவுள்ளனர்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.