ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

முதல் முறையாக இணையும் ஜி.வி.பிரகாஷ் குமார் - ஐஸ்வர்யா ராஜேஷ்... பூஜையுடன் தொடங்கிய படம்!

முதல் முறையாக இணையும் ஜி.வி.பிரகாஷ் குமார் - ஐஸ்வர்யா ராஜேஷ்... பூஜையுடன் தொடங்கிய படம்!

ஜி.வி.பிரகாஷ் குமார் - ஐஸ்வர்யா ராஜேஷ்

ஜி.வி.பிரகாஷ் குமார் - ஐஸ்வர்யா ராஜேஷ்

இசையப்பாளராக இருந்து நடிகரான ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது ஏராளமான திரைப்படங்களில் நடித்த வருகிறார். அந்த வகையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து முதல் முறையாக நடிக்க உள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜி.வி.பிரகாஷ் குமார் - ஐஸ்வர்யா ராஜேஷ்  முதல் முறையாக இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளது.

இசையப்பாளராக இருந்து நடிகரான ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது ஏராளமான திரைப்படங்களில் நடித்த வருகிறார். அந்த வகையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து முதல் முறையாக நடிக்க உள்ளார். அந்த திரைப்படத்தை 'செத்தும் ஆயிரம் பொன்' என்னும் படத்தை இயக்கிய ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

இதற்கான பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. மேலும் படப்பிடிப்பும் இன்று முதல் தொடங்குகிறது.  வித்தியாசமான கதை அம்சத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் காளி வெங்கட், இளவரசு ரோகிணி, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு கதையின் நாயகனாக நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான பேச்சுலர், செல்ஃபி, ஐங்கரன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.  இந்த நிலையில் தன்னுடைய அடுத்த படத்தை ஜி.வி.பிரகாஷ் குமார் தொடங்கியுள்ளார். இந்த திரைப்படம் தனக்கு வெற்றியை கொடுக்கும் என அவர் எதிர்பார்க்கிறார்.

Also read... தளபதி என்றால் அது விஜய் மட்டும்தான்... நான் புரட்சித் தளபதி அல்ல - விஷால் பரபர பேச்சு

ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் க்யூப் நிறுவனத்தைச் சார்ந்த சதீஷ் மற்றும் அனில், ‘கட்டப்பாவ காணோம்’ பட இயக்குநர் மணி, ‘பேச்சுலர்’ பட இயக்குநர் சதீஷ், ‘ஓ மணப்பெண்ணே’ பட இயக்குநர் கார்த்திக் சுந்தர், எஸ் பி சினிமாஸ் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actress Aishwarya Rajesh, GV prakash