முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இந்தியன் 2 படத்தில் இணையும் குரு சோமசுந்தரம்!

இந்தியன் 2 படத்தில் இணையும் குரு சோமசுந்தரம்!

குரு சோமசுந்தரம்

குரு சோமசுந்தரம்

மின்னல் முரளி படத்தில் நாயகன் டொவினோ தாமஸைவிட எதிர்நாயகனாக வரும் குரு சோமசுந்தரத்துக்கே அதிக பாராட்டுக்கள் கிடைத்தன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

லைகா, இயக்குநர் ஷங்கர் இடையிலான கருத்து வேறுபாட்டால் பாதியில் நிற்கும் இந்தியன் 2 திரைப்படம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்தப் படத்தில் குரு சோமசுந்தரம் நடிக்கயிருக்கிறார்.

இந்தியன் 2 படத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் ஊர் அறிந்தது. ஷங்கர் கோபித்துக் கொண்டு தெலுங்கில் ராம் சரண் படத்தை இயக்கச் சென்றார். அடுத்து இந்தியில் அந்நியன் படத்தை ரன்வீர் சிங்கை வைத்து ரீமேக் செய்யப் போவதாகவும் அறிவித்தார். பிறகு நடந்த சமரசப்பேச்சுவார்த்தையின் பயனாக பல நிபந்தனைகளுடன் இந்தியன் 2 படப்பிடிப்பை மீண்டும் தொடங்க சம்மதித்துள்ளார்.

ராம் சரண் படம் முடிந்ததும் இந்தியன் 2 தொடங்கப்பட உள்ளது.

இந்தப் படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடித்திருந்தார். அவர் தற்போது கர்ப்பமாக இருப்பதால் அவரை மாற்றிவிட்டு தமன்னா அல்லது த்ரிஷாவை ஒப்பந்தம் செய்ய உள்ளனர். அதேபோல் மறைந்த நடிகர் விவேக் நடித்த வேடத்தில் குரு சோமசுந்தரத்தை நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

டிசம்பர் 24-ம் தேதி வெளியான மின்னல் முரளி படத்தில் நாயகன் டொவினோ தாமஸைவிட எதிர்நாயகனாக வரும் குரு சோமசுந்தரத்துக்கே அதிக பாராட்டுக்கள் கிடைத்தன. அதில் அவரது நடிப்பைப் பார்த்து மோகன்லால் தான் இயக்கும் பரோஸ் படத்தில் முக்கிய வேடம் அளித்துள்ளார். இப்போது இந்தியன் 2 படத்தில் நடிக்கும் வாய்ப்பு குரு சோமசுந்தரத்துக்கு கிடைத்துள்ளது. அவரது திறமைக்கு மேலும் பல வாய்ப்புகள் தேடி வரும்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Kamal Haasan, Tamil Cinema