முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Gulu Gulu: சந்தானத்தின் குலு குலு திரைப்படம் - விமர்சனம்

Gulu Gulu: சந்தானத்தின் குலு குலு திரைப்படம் - விமர்சனம்

குலு குலு

குலு குலு

குலு குலு படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நடிகர் சந்தானம் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் குலு குலு படத்தின் ட்விட்டர் விமர்சனங்களை இங்கே பதிவிடுகிறோம்.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானவர் நடிகர் சந்தானம். ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பல காமெடி காட்சிகளை ரசிகர்களுக்கு தந்திருக்கிறார். பின்னர், படங்களில் காமெடியனாக நடிப்பதை விட்டுவிட்டு, முழுநேர ஹீரோவாக மாறினார். தற்போது அவர் நடிப்பில் “குலு குலு” என்ற படம் வெளியாகியுள்ளது. இதனை மேயாத மான், ஆடை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அதுல்யா சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தை சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ராஜ் நாராயணன் தயாரித்திருக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் கமல் ஹாசன் குரலில் தமிழ்நாட்டு வரலாறு!

இந்நிலையில் படத்தைப் பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் தங்கள் விமர்சனங்களை பதிவிட்டு வருகிறார்கள். அவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறோம்.

பாஸிட்டிவ் விமர்சனங்களைப் பெறும் குலுகுலு.

முழுக்க ஒர்த்தான படம்.

குலுகுலு மற்ற சந்தானம் படங்களில் இருந்து மாறுபட்டு தெரிகிறது.

படத்தைப் பார்த்தவர்கள் குலுகுலு சிறப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Actor Santhanam, Tamil Cinema