சந்தானம் நடித்துள்ள குலுகுலு படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
மேயாத மான், ஆடை படங்களில் இயக்கியவரும், மாஸ்டர், விக்ரம் திரைப்படங்களின் வசனகர்த்தாவுமான ரத்னகுமார் தற்போது ‘குலுகுலு’ படத்தை இயக்கியுள்ளார்.
சந்தானம் நாயகனாக நடித்துள்ள அந்தப் படம் ஜூலை 28-ம் தேதி வெளியாகிறது. நகைச்சுவை பின்னணியில் உருவாகியிருக்கும் அந்தப் படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.
Also read... அதர்வா நடித்துள்ள 'குருதி ஆட்டம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!
இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். எனவே பாடல்களும் பின்னணி இசையும் கவனம் பெறும் என படக்குழுவினர் நம்புகின்றனர். சந்தானம் நடித்துள்ள குலு குலு படத்தை தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
Presenting #GuluGulu teaser.. Need your wishes🙌🏻😊🙏🏻https://t.co/36V4MIF4Pp@Udhaystalin@MrRathna @circleboxE @rajnarayanan_ @Music_Santhosh @philoedit @KVijayKartik @jacki_art @SonyMusicSouth @Kirubakaran_AKR @proyuvraaj
— Santhanam (@iamsanthanam) July 13, 2022
இந்நிலையில் குலுகுலு திரைப்படத்தின் டீசரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த டீசரில் சகலகலா வித்தை தெறிந்தவன்... பொருளை கைமாற்றுவதில் வித்தகன் என்று சந்தானத்தை புகழ... ஒரு வடையை கைமாற்ற முடியாமல் கைநழுவவிடுகிறார் சந்தானம்... காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் வெளியாகி உள்ள டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Santhanam