Home /News /entertainment /

Chhello Show: ஆஸ்கர் 2023-க்கு தேர்வு செய்யப்பட்டுள்ள குஜராத்தி படம்

Chhello Show: ஆஸ்கர் 2023-க்கு தேர்வு செய்யப்பட்டுள்ள குஜராத்தி படம்

Chhello Show

Chhello Show

இந்த வருடம் ஆஸ்கரில் இந்தியாவில் இருந்து தி காஷ்மீர் ஃபைல்ஸ் மற்றும் ஆர்ஆர்ஆர் படங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    95வது அகாடமி விருதுகளில் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் பங்கேற்க இந்தியாவின் சார்பில் Chhello Show என்ற குஜராத்தி படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இத்திரைப்படம் சிறுவன் சமய்யின் 35 மிமீ கனவை மையப்படுத்தியது. பான் நளின் இயக்கிய இப்படத்தில் பவின் ரபாரி, பவேஷ் ஸ்ரீமாலி, ரிச்சா மீனா, திபென் ராவல் மற்றும் பரேஷ் மேத்தா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் 2021-ல் டிரிபெகா திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

    அக்டோபர் 2021-ல், Chhello Show படம் 66வது Valladolid சர்வதேச திரைப்பட விழாவில் கோல்டன் ஸ்பைக்கை வென்றது. குஜராத்தின் கிராமப்புறங்களில் சிறுவயதில் திரைப்படங்களின் மீது காதல் கொண்ட நளினின் நினைவுகளால் இந்த படம் நிரம்பி வழிகிறது. இப்படத்தை சித்தார்த் ராய் கபூரின் ராய் கபூர் பிலிம்ஸ், ஜுகாத் மோஷன் பிக்சர்ஸ், மான்சூன் பிலிம்ஸ், செலோ ஷோ எல்எல்பி மற்றும் மார்க் டுவால் இணைந்து தயரித்துள்ளது.



    இந்த வருடம் ஆஸ்கரில் இந்தியாவில் இருந்து தி காஷ்மீர் ஃபைல்ஸ் மற்றும் ஆர்ஆர்ஆர் படங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இதில் எஸ்.எஸ் ராஜமௌலி அமெரிக்காவில் நடந்த பல ஆர்ஆர்ஆர் திரையிடல்களில் கலந்து கொண்டார். அதோடு ஆஸ்கார் விருதுகளில் RRR வாய்ப்புகளை பெறும் என பார்வையாளர்களிடம் உரையாற்றினார்.

    பொன்னியின் செல்வன் மேக்கிங் ஸ்டில்ஸ்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கடந்த ஆண்டு, திரைப்படத் தயாரிப்பாளர் வினோத்ராஜ் பிஎஸ் இயக்கிய கூழாங்கல் (கூழாங்கற்கள்) தமிழ் நாடகம், சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவுத் தேர்வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால், இந்தப் படம் இறுதிப் பட்டியலில் இடம் பெறவில்லை.
    Published by:Shalini C
    First published:

    Tags: Oscar Awards

    அடுத்த செய்தி