Home /News /entertainment /

ஆர்ஆர்ஆர், காஷ்மீர் ஃபைல்ஸ் படங்களை பின்னுக்குத்தள்ளி ஆஸ்கருக்கு பரிசீலிக்கப்பட்ட குஜராத்தி படம் 'செலோ ஷோ’!

ஆர்ஆர்ஆர், காஷ்மீர் ஃபைல்ஸ் படங்களை பின்னுக்குத்தள்ளி ஆஸ்கருக்கு பரிசீலிக்கப்பட்ட குஜராத்தி படம் 'செலோ ஷோ’!

செல்லோ ஷோ

செல்லோ ஷோ

ஆர்.ஆர்.ஆர் மற்றும் காஷ்மீர் பைல்ஸ் படங்களை ஓரங்கட்டிய "செலோ ஷோ.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
இந்தாண்டு ஆஸ்கருக்கு பரிசீலிக்கப்பட்ட 13 இந்திய படங்களில் குஜராத்தியின்  'செலோ ஷோ' திரைப்படம் தேர்வு.

2022-ம் ஆண்டு படங்களுக்கான95வது ஆஸ்கர் விருது 2023-ம் ஆண்டு நடைபெற உள்ளது.  இதில் இந்தியா சார்பில் அனுப்பப்படவுள்ள திரைப்படத்தின் அறிவிப்பு தொடர்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள  தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்தில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் இந்திய  திரைப்பட சங்கத்தின்  தேர்வு குழுவினர் பங்கு கொண்டு (பிலிம் பெடரேஷன் ஆப் இந்தியா)இந்தியாவில் இருந்து ஆஸ்காருக்கு தேர்வு செய்த படத்தினை அறிவித்தனர்.

கன்னட இயக்குனர் டி.எஸ். நாகாபரணா (தலைவர்) தலைமையில் 17 பேர் கொண்ட தேர்வுக் குழுவினர், இந்தியா முழுவதும் இருந்து குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட்ட 13 படங்களையும் பார்த்து ஒரு படத்தை தேர்வு செய்துள்ளனர். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆஸ்கார் போட்டிக்கு இந்தியா சார்பில் பல சிறந்த படைப்புகளில் இருந்தும் ஒருமனதாக ஆஸ்கர் விழாவிற்கு 'செலோ ஷோ' (தி லாஸ்ட் ஷோ) என்ற குஜராத்தி திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து தயாரிப்பாளர் ரவி கொட்டாரகரா பேசியதாவது;
இந்தியா சார்பில் வருடத்திற்கு 4000,  5000 படங்கள் எடுக்கப்படுகிறது.  மிக சிறந்த கதைகள் படைப்புகள் இக்காலத்தில் எடுக்கப்பட்டுகின்றன. 1929-ல் ஆஸ்கர் விருது விழா துவங்கப்பட்டது ஆனால் அப்போது வெளிநாட்டு படங்கள் ஏற்காத நிலை இருந்தது. ஆனால் இப்போது இந்த நிலை மாறியுள்ளது. ஆஸ்கருக்கு  இந்தியாவில் இருந்து தரமான படங்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இறங்கி எதாச்சும் செய்யலாமான்னு தோணுது... ப்ளூ சட்டை மாறன் மீதான கோபத்தை வெளிப்படுத்திய கெளதம் மேனன்

இப்படம் வாழ்வில் சினிமாவின் அருமையை சொல்வது மட்டுமின்றி ஒவ்வொரு திரைப்பட ரசிகனின் உணர்வுகளை கூறும் சிறந்த படைப்பாக உருவாகியுள்ளது.  இப்படம் இந்திய மரபையும், பாரம்பரியங்களையும் நுட்பமாகவும் உண்மையாகவும் வெளிப்படுத்துகிறது, இது வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு இந்தியாவின் முகத்தை காட்டுவதாக அமைந்துள்ளது என்றார்.

தலைவர் நாகாபரணா பேசும்போது, இங்கு இந்த விழாவில் பங்கு கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக பெருமையாக  இருக்கிறது. ஆஸ்கர்  விருது தேர்வுக்கு 13 படங்கள் பரிந்துரைக்கப்பட்டது.  பல மொழிகளில் இருந்து பல சிறந்த திரைப்படங்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக குஜராத்தி திரைப்படம் 'செலோ ஷோ' (தி லாஸ்ட் ஷோ) படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது, என்றார்

FFI சார்பாக அகாடமி விருதுகளுக்கு (ஆஸ்கார்) வெளிநாட்டு மொழிப் பிரிவில் நுழைவதற்கான இந்தியத் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது. 2022 ஆம் ஆண்டுக்கான அகாடமி விருதுகளுக்கான வெளிநாட்டு மொழிக்கான இந்திய ஆஸ்கார் நுழைவுத் தேர்வைத் தேர்ந்தெடுத்ததற்காக டி.எஸ். நாகபர்ணா ஜூரி வாரியத்தின் சார்பாக கௌரவிக்கப்பட்டார்.

பல சிறந்த படைப்புகளில் இருந்து ஒருமனதாக ஆஸ்கர் விழாவிற்கு 'செலோ ஷோ' (தி லாஸ்ட் ஷோ) என்ற தலைப்பில் படம்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கார் நுழைவுக்கு பரிசீலிக்கப்பட்ட படங்கள்

இந்தியிலிருந்து பதாய் தோ, ராக்கெட்ரி, ஜுண்ட், பிரம்மாஸ்திரம், தி காஷ்மீர் ஃபைல்ஸ், அனெக் ஆகிய ஆறு படங்கள். திமாசா (அசாம்)-1 - செம்கோர், தமிழில் இருந்து இரவின் நிழல், குஜராத்தியில் செலோ ஷோ, தெலுங்கில் இருந்து ஆர்ஆர்ஆர், ஸ்தலம் ஆகிய படங்களும், மலையாளத்தில் இருந்து அரியுப்பு , பெங்காலியில் அபராஜிதோ ஆகிய படங்கள் இந்தாண்டுக்கான ஆஸ்கர் போட்டியில் பங்கேற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Shalini C
First published:

Tags: Oscar Awards

அடுத்த செய்தி