தமிழ் சினிமாவில் குழு அரசியல்... முகத்திரைகள் கிழியும் - மாநாடு பட தயாரிப்பாளர் அதிரடி

ஒரு சில தயாரிப்பாளர்களிடையே குரூப்பிசம் இருப்பதாக மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் குழு அரசியல்... முகத்திரைகள் கிழியும் - மாநாடு பட தயாரிப்பாளர் அதிரடி
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி
  • Share this:
இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தை அடுத்து இந்தி திரைப்பட உலகில் வாரிசுகளின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாகவும் வாரிசுகளுக்கு மட்டுமே வாய்ப்புகள் வழங்கப்படுவதாகும் புகார்கள் குவியத் தொடங்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தி திரைப்படங்களில் தான் பணியாற்றக் கூடாது என ஒரு கூட்டம் உழைத்து வருவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை நாயகன் நட்டி நட்ராஜ், சாந்தனு ஆகியோர் தமிழ் சினிமாவில் குழு அரசியல் இருப்பதாக அதிரடியாக கருத்து பதிவிட்டனர். அவர்களைத் தொடர்ந்து ‘மாநாடு’ பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களிடையே குழு அரசியல் இருப்பதாக தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

சுரேஷ் காமாட்சி தனது பதிவில் கூறியிருப்பதாவது, “பாலிவுட்டில் மட்டுமல்ல குரூப்பிஸம் இங்கும் உள்ளது. நடிகர்களிடம் உள்ளதோ இல்லையோ ஒருசில தயாரிப்பாளர்களிடம் உள்ளது. அவர்களால்தான் மிகப் பழமையான தயாரிப்பாளர்களும் ஒதுங்கியிருப்பதுவும் அதனால்தான். தான் மட்டுமே வாழவேண்டும் என நினைக்கும் அந்த பிரபல தயாரிப்பாளர் தன் பலத்தால் சில பல தயாரிப்பாளர்களை உடன் சேர்ந்துகொண்டு பலரை வாழவிடாமல் கெடுத்துக்கொண்டிருக்கிறார்.
ஹீரோக்களுக்கு போன் பண்ணி கெடுத்துவிடுவதும், ஃபைனான்சியர்களை கலைத்துவிடுவதும், படத்தைப் பற்றி கேவலமாக கிளப்பிவிட்டு விநியோகஸ்தர்களிடம் பீதியை உருவாக்குவதுமாக முன்னால் விட்டு பின்னால் செய்யும் வேலையை வெற்றிகரமாக செய்துவருகிறார். அதற்கு சில தயாரிப்பாளர்கள் உடன் பட்டு நிற்பதுதான் வேதனை. வெகுவிரைவில் முகத்திரைகள் கிழியும். அதற்கு நடுவில் பாலிவுட் போல யாரும் தற்கொலை அது இதுன்னு இறங்கிவிடக்கூடாது. குரூப்பிஸம் விரைவில் ஒழிக்கப்பட வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
First published: July 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading