ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

''சன்னி லியோன் யாருன்னே தெரியாது... படத்த காமிச்சாங்க'' - மேடையில் கலகலனு பேசிய ஜிபி முத்து

''சன்னி லியோன் யாருன்னே தெரியாது... படத்த காமிச்சாங்க'' - மேடையில் கலகலனு பேசிய ஜிபி முத்து

ஜிபி முத்து

ஜிபி முத்து

ஓ மை கோஸ்ட்’ திரைப்படத்தில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஜிபி முத்து சன்னி லியோன் குறித்து கலகலப்பாக பேசினார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சன்னி லியோன் நடித்துள்ள ‘ஓ மை கோஸ்ட்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சன்னி லியோனும் கலந்து கொண்டனர். இந்த படத்தில் ஓ மை கோஸ்ட் படத்தில் தர்ஷா குப்தா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, ஜி.பி.முத்து என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சன்னி லியோனும் நடித்துள்ளார்.

  இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஜிபி முத்து சன்னி லியோன் குறித்து கலகலப்பாக பேசினார். மேடையில் பேசிய அவர், ''ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதுதான் என்னுடைய முதல் படம். இயக்குநரிடம் நடிக்க பயமா இருக்குனு சொன்னேன். கவலைபடாதீங்க. சொல்ற படி நடிங்கனு இயக்குநர் சொன்னார். சன்னி லியோன்னு சொன்னாங்க.. அவங்க யாருனு அப்போது எனக்கு தெரியாது. நிறைய கமெண்ட்லாம் வரும். ஆனாலும் எனக்கு தெரியாது. இதுதான் சன்னிலியோன்னு சொல்லி சில படத்தையெல்லாம் காமிச்சான். அதாவது புகைப்படத்த காமிச்சாங்க''என்றார். சன்னி லியோன் குறித்து ஜிபி முத்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  முன்னதாக சன்னி லியோன் பற்றி பேசிய படக்குழு, சன்னி லியோனின் அசாதரண நடிப்பும், துணிச்சல் மிகுந்த ஆக்‌ஷன் காட்சிகளும் அவரின் இன்னொரு முகத்தை காட்டும்.

  சீரியல் நடிகரின் மனைவி உயிரை பறித்த பேலியோ டயட்... ஊட்டச்சத்து நிபுணர் சொல்வது இதுதான்!

  இந்த படத்தின் டீசருக்கு கிடைத்த வரவேற்பு எங்களுக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்தது. சன்னி லியோனின் தமிழ் பட வருகையை நிச்சயம் அவரின் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்றனர்.

  Published by:Murugadoss C
  First published:

  Tags: Actress Sunny Leone