நயன்தாரா தரப்பு தன்னை அவமானப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார் ஜி.பி.முத்து.
நயன்தாராவின் 'கனெக்ட்' திரைப்படம் நேற்று வெளியானது. இப்படத்தின் சிறப்பு பிரீமியர் ஷோ டிசம்பர் 20-ம் தேதி சென்னையில் நடந்தது. இதையடுத்து பல பிரபலங்கள் திரையிடலுக்கு வருகை தந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு கன்டென்ட் கிரியேட்டரும், நடிகருமான ஜி.பி.முத்துவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், நயன்தாராவின் ‘கனெக்ட்’ குழு தன்னை அவமதித்து, மோசமாக நடத்தியதாக அவர் தற்போது குற்றம்சாட்டியுள்ளார்.
ஜி.பி.முத்துவின் கூற்றுப்படி, நயன்தாரா அவரை சந்திக்க விரும்புவதாகவும், அதனால் விஐபி வரிசையில் நயனுடம் அமரும்படி அவருக்கு இருக்கை ஒதுக்கப்படும் என கனெக்ட் குழு தன்னிடம் கூறியதாக தெரிவித்தார். ஆனால், அவர் விஐபி வரிசைக்கு செல்ல முயன்றபோது, பவுன்சர்கள் அவருக்கு அனுமதி மறுத்து பின் வரிசையில் அமரச் சொன்னார்களாம். இதையடுத்து தான் பின் வரிசையில் அமர்ந்து படத்தைப் பார்த்ததாகவும், கனெக்ட் குழுவின் அணுகுமுறையால் தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும் ஊடகங்களிடம் தெரிவித்தார் ஜி.பி.முத்து.
உலகளவில் 5000 கோடி வசூலை நெருங்கும் அவதார்: தி வே ஆஃப் வாட்டர்!
அஸ்வின் சரவணன் இயக்கிய 'கனெக்ட்' படம் 99 நிமிட படமாக உருவாகியுள்ளது. இதன் 59 வது நிமிடத்தில் இடைவெளி இருக்கும், ஏனெனில் திரையரங்க உரிமையாளர்கள் படத்தை சுமூகமாக வெளியிட இடைவேளை வேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் கோரிக்கை விடுத்ததையடுத்து, இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Nayanthara