ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அஜித்தின் ஏகே62 படத்தில் ஜி.பி.முத்து?

அஜித்தின் ஏகே62 படத்தில் ஜி.பி.முத்து?

ஜி.பி.முத்து - அஜித்

ஜி.பி.முத்து - அஜித்

ஏகே 62 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இணைய பிரபலம் ஜி.பி.முத்து, அஜித்தின் அடுத்தப் படமான ஏகே 62-வில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  டிக் டாக் மற்றும் யூ-டியூப் வீடியோக்கள் மூலம் வாழ்க்கையைத் தொடங்கிய ஜி.பி.முத்து, கணிசமான ரசிகர்களைக் கொண்டுள்ளார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் 6 நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்து கொண்டார். இதற்கிடையே அவர் அஜித்தின் அடுத்த படமான 'ஏகே 62' படத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படுகிறது.

  இந்த ஆண்டு டிசம்பரில் படக்குழு படப்பிடிப்பை தொடங்கும் என்று தெரிகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவன் ஏற்கனவே நடிகர்களை அதற்காக இறுதி செய்துவிட்டார். சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில், அஜித்தின் அடுத்த படம் குறித்து குழுவினருடன் பேசி வருவதாக ஜி.பி.முத்து தெரிவித்தார். படத்தில் அவரது கதாபாத்திரம் காமெடி சாயலில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
   
  View this post on Instagram

   

  A post shared by G P . M U T H U (@gpmuthu.24)  நடிகர் விக்ரமின் நோ ஷேவ் நவம்பர் லுக்!

  பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். ஏகே 62 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ள 'துணிவு' படத்தின் டப்பிங்கை சமீபத்தில் முடித்தார் அஜித். ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Ajith, Vignesh Shivan