நடிகர் சாந்தனுவிடம் மன்னிப்பு கேட்ட மாஸ்டர் பட நடிகை!

நடிகர் சாந்தனுவிடம் மன்னிப்பு கேட்ட மாஸ்டர் பட நடிகை!
நடிகை கௌரி கிஷான்
  • Share this:
நடிகர் சாந்தனுவுடன் மாஸ்டர் படத்தில் நடித்த கௌரி கிஷான் மன்னிப்பு கோரியுள்ளார்.

96 படத்தில் சிறுவயது த்ரிஷா கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் கௌரி கிஷான். இவர் தற்போது விஜய்யுடன் மாஸ்டர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கடந்த 15-ம் தேதி சென்னை நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற மாஸ்டர் பட இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கௌரி கிஷான், படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தார். அப்போது தவறுதலாக நடிகர் சாந்தனுவை சாந்தனு மேம் என்று மேடையில் கூற அனைவரும் சிரித்து விட்டனர்.


பின்னர் சுதாரித்துக் கொண்ட கௌரி கிஷான் சாந்தனு சார் என்று உடனடியாக மாற்றிக் கூறினார். இதைக் குறிப்பிட்டு சமூகவலைதளவாசிகள் பலரும் கௌரி கிஷானை கிண்டல் செய்து வந்தனர். இதனையடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்க பதிவில் சாந்தனுவிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார் கௌரி. அதில், அண்ணா என்று கூறுதற்கு பதிலாக மேம் என்று கூறிவிட்டேன். மன்னித்து விடுங்கள் அண்ணா” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: விஜய்யின் அடுத்த படத்தை நான் இயக்கவில்லை - பிரபல இயக்குநர் விளக்கம்


First published: March 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading