Goundamani: கவுண்டமணியுடன் பிரபல நடிகரின் வாரிசுகள்! லைக்ஸை குவிக்கும் த்ரோபேக் படம்!

Goundamani: கவுண்டமணியுடன் பிரபல நடிகரின் வாரிசுகள்! லைக்ஸை குவிக்கும் த்ரோபேக் படம்!

கவுண்டமணி

தமிழ் சினிமாவின் பெருமைமிக்க நகைச்சுவை நடிகரான கவுண்டமணி, நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ் மற்றும் மகள் திவ்யாவுடன் இருக்கும் த்ரோபேக் புகைப்படம் இணையத்தில் லைக்ஸை குவித்து வருகிறது.

  • Share this:
    தமிழ் சினிமாவின் பெருமைமிக்க நகைச்சுவை நடிகரான கவுண்டமணி, நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ் மற்றும் மகள் திவ்யாவுடன் இருக்கும் த்ரோபேக் புகைப்படம் இணையத்தில் லைக்ஸை குவித்து வருகிறது.

    90-ஸ் கிட்ஸுக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நடிகர் கவுண்டமணி. நடிகர் செந்திலுடன் இணைந்து இவர் செய்த காமெடிகள் அனைத்தும் என்றும் பசுமையானவை. அதோடு ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார், கார்த்திக் என பல ஹீரோக்களுடன் இணைந்தும் காமெடியில் கலக்கியிருக்கிறார் கவுண்டமணி.



     




    View this post on Instagram





     

    A post shared by Divya Sathyaraj (@divya_sathyaraj)






    Cook With Comali: ‘குக் வித் கோமாளி’ வைல்ட் கார்டில் எண்ட்ரியான ஃபேவரிட் நட்சத்திரங்கள்!

    சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்ட உடல்நல பிரச்னைகளுக்குப் பிறகு, கவுண்டமணி நடிப்பில் இருந்து விலகியிருக்கிறார். கடைசியாக ஐந்து வருடங்களுக்கு முன்னர் வெளியான, அரசியல் நையாண்டி திரைப்படமான ’49 ஓ’ மற்றும் ’வாய்மை’ ஆகியப் படங்களில் நடித்திருந்தார். இப்போது கூட, பல நட்சத்திரங்கள் அவருடன் நடிக்க விரும்புகிறார்கள்.

    இப்போது கவுண்டமணியின் ஒரு பழமையான புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் நடிகர் சத்யராஜின் குழந்தைகள் நடிகர் சிபிராஜ் மற்றும் திவ்யா சத்யராஜ் ஆகியோருடன் கவுண்டமணி அமர்ந்திருக்கிறார். இதனை திவ்யா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். சத்யராஜும், கவுண்டமணியும் பல ஹிட் திரைப்படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர், அதோடு அவர்களது காம்போ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    சிறந்த கதைகள்