Home /News /entertainment /

பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேணுமா..! தமிழ் சினிமாவின் கலாய் மன்னன் கவுண்டமணியும் கவுன்டர்களும்

பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேணுமா..! தமிழ் சினிமாவின் கலாய் மன்னன் கவுண்டமணியும் கவுன்டர்களும்

கவுண்டமணி

கவுண்டமணி

இயக்குனரும் வசனகர்த்தாவும் யோசிக்காத வசனத்தை சொல்லி கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆனார்.

    தமிழ் சினிமாவில் காமடியில் எப்போதும் ’ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக’ இருப்பவர். கவுண்டமணி. இவரின் கவுன்டர் டயலாக்குகள் பற்றிய தொகுப்பு. 

    தன் காமெடி கவுண்ட்டர்களால் கலாய்க்கும் கவுண்டமணி உள்ளூர் நாடகத்தில் ஊர் கவுண்டர் கதாபாத்திரத்தில் வெளுத்து கட்டியதால் கவுண்டர் மணி என அழைக்கப்பட்டார்.. பின்னாளில் சினிமாவில் இதுவே கவுண்டமணி ஆனது. முதன் முதலில் கவுண்ட மணியின் கவுண்ட்டர் வேட்டை ‘வைதேகி காத்திருந்தாள்’ திரைப்படத்தில் ஆரம்பமானது. ‘பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேணுமா’… ‘ஏண்டா எப்ப பாத்தாலும் எருமை சாணிய மூஞ்சில அப்புன மாதிரி இருக்க’ என்பன போன்ற வசனங்கள் அப்போதே வைரல் ஹிட்டானது.

    இதையும் படிங்க.. cooku with comali : ரக்‌ஷனின் சம்பளத்தை கேட்டு ஷாக்கான குக் வித் கோமாளி ரசிகர்கள்!

    ’சூரியன்’ திரைப்படத்தில் ’டேய்…. நாராயணா இந்த கொசு தொல்லை தாங்க முடியலடா!’ என்பதும்….. ’இந்தப் பொழப்புக்கு பிச்சை எடுக்கலாம்…’ என ஒரு கதாபாத்திரம் கவுண்டமணியை பார்த்து சொல்ல சற்றும் யோசிக்காமல் ’போய் எடு’ என சொல்வதும் ’குளிக்கிறையோ…….இல்லையோ.. நெத்தியில சிவகடாச்சம் மாதிரி பெரிய பொட்டு ஒன்னு வச்சுக்கற’ என இயக்குனரும் வசனகர்த்தாவும் யோசிக்காத வசனத்தை சொல்லி கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆனார்.

    Goundamani comdey senthil goundamani comdies in tamil movies vadivelu sathyaraj goundamani movies

    ’சின்ன வாத்தியார்’ திரைப்படத்தில் ’எந்த மூஞ்சிய வச்சுட்டு ஊருக்கு போவேன்’ என இடிச்ச புளி செல்வராஜ் சொல்ல ’ஏதாவது ஒரு மூஞ்சிய வாடகைக்கு வச்சுட்டு போ’ என சொல்வதும் ’ நாட்டாமை’ திரைப்படத்தில் ‘பெண்ணுக்கு பாட தெரியுமா’ என செந்தில் கேட்க சட்டென்று கவுண்டமணி சொல்லும் ‘ஏன் தெரு தெருவா பாட வச்சு பிச்சை எடுக்க போறியா ‘ என கேட்கும் வசனத்திலும் கவுண்ட்டர் டயலாக்குகளில் கதகளி ஆடியிருப்பார் கவுண்டமணி.

    இதையும் படிங்க.. பல போராட்டங்களுக்கு பிறகு கல்யாணம்.. சூப்பர் சிங்கர் பிரபலத்துக்கு குவியும் வாழ்த்துக்கள்!

    Goundamani comdey senthil goundamani comdies in tamil movies vadivelu sathyaraj goundamani movies

    ‘உள்ளத்தை அள்ளி தா’ திரைப்படத்தில் ஒரு காட்சியில் கவுண்டமணியை பார்த்தால் மாப்பிள்ளை மாதிரி இல்லையே என சொல்லும் போது டபக்கென்று’ மாப்பிள்ளைனா நெத்தில சூடு போட்டுருப்பாங்களா’ என சொல்லும் இவரின் கவுண்ட்டரில் இவருக்கு இவர் மட்டுமே நிகர் ஆனார். கட்டுக்கடங்கா சிரிப்பை தந்த கவுண்டமணியின் கவுன்டர் காமடிகளுக்கு என்றுமே ‘அட்றா சக்கை’ போடும் தமிழ் சினிமா.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Actor Goundamani, Kollywood, Tamil Cinema

    அடுத்த செய்தி