• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாளுக்கு டூடுல் போட்டு கௌரவித்த கூகுள்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாளுக்கு டூடுல் போட்டு கௌரவித்த கூகுள்!

கூகுள் டூடுல்

கூகுள் டூடுல்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 93-வது பிறந்தநாளை முன்னிட்டு டூடுல் போட்டு கூகுள் மரியாதை செலுத்தியுள்ளது.

  • Share this:
    'சிவாஜி' கணேசன், சின்னையா மன்ராயா் - ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு 4வது மகனாக அக்டோபர் 1, 1928 ஆம் ஆண்டு பிறந்தார். சிவாஜி கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.

    'சிவாஜி' கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். 1952ம் ஆண்டு கருணாநிதியின் திரைக்கதை, வசனத்தில் உருவான பராசக்தி படத்தின் மூலம் திரையில் அறிமுகமானார் சிவாஜி.

    சிவாஜி நடித்த சரித்திர வீரா்களின் கதாபத்திரங்களான மனோகரா, ராஜ ராஜ சோழன், கர்ணன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை. அதே போல் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற தேச தலைவர்களின் பாத்திரங்களை ஏற்றுத் திறம்பட நடிக்க செய்தார். மேலும் புராணகால கடவுள்கலான அனைத்து கடவுளின் கதாபத்திரங்களில் நடித்துள்ளார். திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர் கந்தன் கருணை, திருமால் பெருமை மேலும் திரைப்படத்தில் இவர் சிவபெருமாளாக நடித்தபோது அந்த லிங்கமாக பார்த்த மக்கள்யாவும் சிவபெருமாளுக்கே உருவம் கொடுத்தவர் சிவாஜி கணேசன் என்று மக்களால் புகழ பெற்றவர்.

    செவாலியர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் சிவாஜி கணேசன். அதோடு கலைமாமணி விருது, பத்மஸ்ரீ விருது, பத்ம பூஷன் விருது, தாதா சாகெப் பால்கே விருது என பல விருதுகள் இவரை கௌரவிக்கின்றன.  இவருடைய பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்தது குறிப்பிடதக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: