ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஜீவா, மிர்ச்சி சிவா நடிப்பில் லிங்கா கதாசிரியரின் கோல்மால்!

ஜீவா, மிர்ச்சி சிவா நடிப்பில் லிங்கா கதாசிரியரின் கோல்மால்!

மிர்ச்சி சிவா - ஜீவா

மிர்ச்சி சிவா - ஜீவா

கோல்மாலில் ஜீவா, மிர்ச்சி சிவா இணைந்து நடிக்கின்றனர். இவர்களது ஜோடியாக பாயல் ராஜ்புத், தான்யா ஹோப் ஆகியோர் நடிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ரஜினி நடித்த லிங்கா படத்தின் கதையை எழுதியவர் பொன் குமரன். இவரது முதல் நேரடி தமிழ் படமாக கோல்மால் தயாராகிறது.

பொன் குமரன் தமிழர். கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக இருந்தவர். ஆனால், கன்னடத்தில் தான் அதிக படங்கள் இயக்கியுள்ளார். பல வருடங்கள் முன்பு ப்ரியாமணி இரட்டை வேடத்தில் நடித்த சாருலதா படத்தை இயக்கியவரும் இவரே. இவரது முதல் நேரடித் தமிழ் படமாக கோல்மால் உருவாகிறது.

படத்தை ஆரம்பிக்கும் போதே, இதன் மொத்த படப்பிடிப்பும் மொரிஷியஸில் நடக்கும் என்று தெரிவித்திருந்தார் பொன் குமரன். அதன்படி சுமார் 25 தினங்கள் மொரிஷியஸில் படப்பிடிப்பு நடத்திவிட்டு சென்னை திரும்பியுள்ளார். சென்னையில் சில காட்சிகளை இயக்கிவிட்டு மீண்டும் மொரிஷியஸ் செல்கின்றனர்.

Golmaal directed by Linga script writer, golmaal, golmaal movie,  golmaal old, golmaal movie, golmaal cast, golmaal imdb, golmaal full movie, golmaal full movie download, golmaal song, jiiva, கோல்மால், கோல்மால் திரைப்படம், கோல்மால் ஜீவா

கோல்மாலில் ஜீவா, மிர்ச்சி சிவா இணைந்து நடிக்கின்றனர். இவர்களது ஜோடியாக பாயல் ராஜ்புத், தான்யா ஹோப் ஆகியோர் நடிக்கின்றனர். அவர்களுடன் யோகி பாபு, ஆடுகளம் நரேன், மனோபாலா, சுப்பு பஞ்சு, வையாபுரி, யூகி சேது, சஞ்சனா சிங், ரமேஷ் கண்ணா உள்பட ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது. ஜாகுவார் ஸ்டுடியோஸ் சார்பில் பி.வினோத் ஜெயின் கோல்மாலை தயாரிக்கிறார். அருள் தேவ் படத்துக்கு இசையமைக்கிறார். ரொமான்டிக் காமெடியாக கோல்மால் தயாராகி வருகிறது. விரைவாக படப்பிடிப்பை முடித்து கோடைக்கு முன் படத்தை திரைக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Tamil Cinema