Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

''என் படம் மோசமானதுனு சொல்ல கமலுக்கு மட்டுமே தகுதியிருக்கு'' - பிரபல இயக்குநர் அதிரடி கருத்து

''என் படம் மோசமானதுனு சொல்ல கமலுக்கு மட்டுமே தகுதியிருக்கு'' - பிரபல இயக்குநர் அதிரடி கருத்து

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

நான் கீழே விழுந்தபோது நீங்கள் சிரித்ததை என்றும் மறக்க மாட்டேன். யார் வேண்டுமென்றே வீழ்வதில்லை. இயற்கையால் இது நடக்கிறது. அந்த இயற்கை என்னைக் காக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ், தெலுங்கில் உருவான நேரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்ரன். அதனைத் தொடர்ந்து மலையாளத்தில் அவர் இயக்கிய பிரேமம் திரைப்படம் கேரளாவில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு பிருத்விராஜ், நயன்தாரா நடிப்பில் அல்போன்ஸ் புத்ரன் இயக்கிய கோல்டு திரைப்படம் மலையாளம் மற்றும் தமிழிலில் வெளியானது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத காரணத்தால் இந்தப் படம் வெற்றிபெறவில்லை. இருப்பினும் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது.

கோல்டு படத்துக்கு சமூக வலைதளங்களில் எதிர்மறை விமர்சனங்கள் கிடைத்துவருகின்றன. இதனையடுத்து அல்போன்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் என் படத்தை தொடர்ச்சியாக விமர்சிக்கிறீர்கள் அது உங்களுக்குதான் நல்லது. எனக்கு இல்லை. எனவே சமூக வலைதளத்தில் என் புகைப்படத்தைக் காட்டப்போவதில்லை.

பொது இடத்தில் என்னை கேலி செய்ய யாருக்கும் உரிமையில்லை. என் படம் பிடித்திருந்தால் பாருங்கள். சமூக வலைதளங்களில் உங்கள் கோபத்தை காட்டாதீர்கள். அப்படி செய்தால் நான் சமூக வலைதளங்களில் இருக்க மாட்டேன். நான் எனக்கும் என் மனைவிக்கும் உண்மையாக இருப்பேன். நான் கீழே விழுந்தபோது நீங்கள் சிரித்ததை என்றும் மறக்க மாட்டேன். யாரும் வேண்டுமென்றே வீழ்வதில்லை. இயற்கையால் இது நடக்கிறது. அந்த இயற்கை என்னைக் காக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

அவரது பதிவில் ரசிகர் ஒருவருக்கு பதிலளித்த அல்போன்ஸ், 'இந்தியாவில் கமல்ஹாசன் சார் மட்டுமே என் படம் மோசமானது என கமெண்ட் செய்ய தகுதியானவர். அவர் மட்டுமே சினிமா பற்றி என்னை விட அதிகம் தெரிந்தவர்' என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Gold, Kamal Haasan