• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சுதந்திரத்தின கொண்டாட்டம் - Godzilla VS Kong வீட்லயே பார்க்கலாம்..

சுதந்திரத்தின கொண்டாட்டம் - Godzilla VS Kong வீட்லயே பார்க்கலாம்..

Godzilla VS Kong

Godzilla VS Kong

ஹாலிவுட் பிரம்மாண்ட திரைப்படமான காட்ஸில்லா வெர்சஸ் காங் அமேசான் பிரைமில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

  • Share this:
    இந்த வருடம் இந்திய திரையரங்கில் அதிகம் வசூலித்த ஹாலிவுட் படம் காட்ஸில்லா வெர்சஸ் காங். காட்ஸிலாவையும், காங் என்ற கொரில்லா குரங்கையும் வைத்து ஹாலிவுட் விதவிதமாக வித்தை காட்டியிருக்கிறது. அதன் லேட்டஸ்ட் வெர்சன்தான் இந்தப் படம்.

    பிரமாண்டம் மற்றும் செக்ஸ் இரண்டுக்கும் மொழி ஒரு தடையில்லை என்பதால் காட்ஸில்லா வெர்சஸ் காங் இந்தியாவில் சக்கைப்போடு போட்டது. மார்ச் 24, 5 நாடுகளில் இப்படம் திரையரங்கில் வெளியானது. அதில் ஒரு நாடு இந்தியா. இங்கு வெளியான பிறகு 31 மார்ச்சில் யுஎஸ்ஸில் வெளியானது. யுகேயில் ஏப்ரல் 1 ஆம் தேதி. காட்ஸில்லா வெர்சஸ் காங் படத்தை திரையரங்கில் பார்க்க முடியாத  ரசிகர்களுக்கு நற்செய்தி. அமெசான் பிரைம் வீடியோவில் இப்படம் ஆகஸ்ட் 14 வெளியாகிறது. நமது சுதந்திரத்தின் முதல்நாள்.

    Also Read : கொரோனா தடுப்பூசிப் போட்டுக்கொண்ட பீஸ்ட் பட ஹீரோயின்..

    இதில் இன்னொரு சிறப்பம்சம் ஆங்கிலம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய பிராந்திய மொழிகளிலும் இப்படத்தை வெளியிடுகின்றனர். அதனால், சுதந்திரத்தினத்தை குடும்பம், குழந்தைகளுடன் வீட்டில் கொண்டாட இந்தப் படம் சரியான தேர்வாக இருக்கும்

    Photos : 40 வயதில் இப்படி ஒரு கவர்ச்சி காட்ட முடியுமா.. நடிகை கிரணின் ஹாட் போட்டோஸ்

    200 மில்லியன் டாலர்கள் செலவில் (நமது ரூபாயில் சுமார் 1480 கோடிகள்) செலவில் எடுக்கப்பட்ட படம் உலக அளவில் சுமார் 463 மில்லியன் டாலர்களை இதுவரை வசூலித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: