முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Godzilla Vs Kong Box Office : வசூல் வேட்டை நடத்தும் காட்ஸில்லா vs காங்.. இந்தியாவில் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Godzilla Vs Kong Box Office : வசூல் வேட்டை நடத்தும் காட்ஸில்லா vs காங்.. இந்தியாவில் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

காட்ஸில்லா vs காங்

காட்ஸில்லா vs காங்

ஹாலிவுட் படமான காட்ஸில்லா vs காங் இந்தியா முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருவதால் திரையரங்க உரிமையாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற மான்ஸ்டர்வெர்ஸ் வரிசையின் நான்காவது பாகமாக அண்மையில் வெளிவந்திருக்கும் படம் காட்ஸில்லா vs காங். இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் 1,770 திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளிவந்திருக்கும் இப்படம் முதல் நாளில் மட்டும் 7 கோடியே 80 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்து அசத்தியுள்ளது.

இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் மட்டும் இப்படம் இரண்டு கோடியே 50 லட்ச ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. தமிழில் விஜயின் மாஸ்டருக்கு பின் எந்த படமும் சொல்லிக்கொள்ளும்படியான வசூல் ஈட்டாத நிலையில் இப்படம் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பது திரையரங்க உரிமையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

' isDesktop="true" id="436413" youtubeid="I8m6P0g7RqA" category="cinema">

காட்ஸில்லா, காங் என இரண்டு ராட்சச உயிரினங்கள் மோதிக்கொள்ளும் சண்டை காட்சிகளை அசத்தலான கிராபிக்ஸ் தொழில்நுட்பத்துடன் வடிவமைத்திருப்பதால் இப்படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் பெரிதும் கவர்ந்துள்ளது. இதன் காரணமாக பாக்ஸ் ஆபீசில்

கொரோனாவுக்கு பின்னர் ஹாலிவுட்டின் முதல் வெற்றிப்படமாக இப்படம் உருவெடுத்துள்ளது.

அதேபோல் இந்தியிலும் கொரோனாவுக்கு பின் முதல்முறையாக இப்படம் மிகப்பெரிய ஓபனிங்கை பெற்றுள்ளது. இதன் மூலம் உலகளவில் திரையரங்க உரிமையாளர்களுக்கும் திரைத்துறையை சார்ந்தவர்களுக்கும் இப்படம் புது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Box office, Movie