’காட்மேன்’ வெப்சீரிஸ் வெளியீடு ஒத்திவைப்பு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

காட்மேனுக்கு கிடைத்த எதிர்வினைகளைக் கருத்தில் கொண்டு, அந்தத் தொடரின் வெளியீட்டை ஒத்தி வைக்க முடிவெடுத்துள்ளதாக ஜீ5 நிறுவனம் தெரிவித்துள்ளது.

’காட்மேன்’ வெப்சீரிஸ் வெளியீடு ஒத்திவைப்பு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
காட்மேன்.
  • Share this:
ஜெயபிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ள வெப்சீரிஸ் காட்மேன். இதை விஜய் ஆண்டனியின் தமிழரசன் படத்தின் இயக்குநர் பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார். இத்தொடர் ஜீ5 தளத்தில் ஜுன் 12-ம் தேதி வெளியிட இருப்பதாக விளம்பரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து டீசரும் வெளியானது.

இந்த டீசர் காட்சி வெளியானதிலிருந்து பல்வேறு சர்ச்சைகள் உருவாகின. டீஸரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் பிராமண சமூகத்திற்கு எதிரானதாகவும், பாலுணர்வைத் தூண்டக் கூடிய வகையிலும் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் குற்றச்சாட்டுக்கு உள்ளான காட்சிகள் நீக்கப்பட்டு புதிய டீசரும் வெளியிடப்பட்டது.

இருப்பினும் அமெரிக்கை நாரயணன் மற்றும் பா.ஜ.கவைச் சேர்ந்த அஸ்வத்தாமன், நாராயணன் ஆகியோர் ஆன்லைன் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், தயாரிப்பாளர் இளங்கோவன் மற்றும் இயக்குநர் பாபு யோகேஸ்வரன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நேரில் ஆஜராகவும் சம்மன் அனுப்பினர்.


இந்நிலையில் இத்தொடரை வெளியிட இருந்த ஜீ5 நிறுவனம் காட்மேன் வெளியீட்டை தற்போதைக்கு ஒத்திவைக்க முடிவெடுத்திருப்பதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் ட்விட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, “ஜீ5 பொறுப்புணர்வுமிக்க படைப்பு நிறுவனம். சுயகட்டுப்பாட்டு படைப்புகள் வரும்போது ஜீ5 நிறுவனம் கடுமையான விதிமுறைகளை பின்பற்றிவருகிறது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வலுவான அம்சங்களை முன்கூட்டியே சேர்க்கப்பட்டுள்ளன. பார்வையாளர்களின் நலனுக்காக இணையதள படைப்புகள் வழங்கும் நிறுனங்களுக்கான சுய கட்டுப்பாட்டு விதிமுறைகளில் கையெழுத்திட்ட முதல் நிறுவனங்களில் ஒன்று ஜீ5.

எங்களுடைய தமிழ் புனைக்கதை தொடரான காட்மேனுக்கு கிடைத்த எதிர்வினைகளைக் கருத்தில் கொண்டு, அந்தத் தொடரை தற்போது வெளியிடுவதை ஒத்திவைக்க முடிவெடுத்துள்ளோம். தயாரிப்பாளர்கள், ஜி5-க்கு எந்த ஒரு மத, இன, தனிப்பட்ட நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் எண்ணம் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க: வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் - பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா


First published: June 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading