’காட்மேன்’ வெப்சீரிஸ் ஒத்திவைப்பு: படைப்புச் சுதந்திரத்தைக் காக்க திரையுலகம் ஒன்றிணையவேண்டும் - தயாரிப்புக் குழு

'காட்மேன் வெப்சீரீஸ்' தடை செய்யப்பட்டால் படைப்புச் சுதந்திரமே கேள்விக்குறி ஆகிவிடும் என தயாரிப்புக்குழு தெரிவித்துள்ளது.

’காட்மேன்’ வெப்சீரிஸ் ஒத்திவைப்பு: படைப்புச் சுதந்திரத்தைக் காக்க திரையுலகம் ஒன்றிணையவேண்டும் - தயாரிப்புக் குழு
காட்மேன்.
  • Share this:
காட்மேன் வெப்சீரிஸ் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த வெப்சீரிஸ் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், குறிப்பிட்ட அந்த டீசரில் இடம்பெற்றிருந்த வசனங்களின் உண்மைத்தன்மை என்ன, வெப் சீரீஸின் கதை என்ன, கதாபாத்திரங்களின் தன்மை என்ன என்ற புரிதல் இல்லாமல் இந்து மதத்துக்கு எதிரானது என்னும் கருத்தை உருவாக்கி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

படைப்புச் சுதந்திரத்துக்கு வந்துள்ள இந்த ஆபத்தை திரையுலகத்தினர் ஒன்றுசேர்ந்து தடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது. இந்தக் கோரிக்கை விண்ணப்பத்தை ஒரு கையெழுத்து இயக்கமாக மாற்றி பிரதமர் மற்றும் முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு செல்ல உள்ளதாகவும் காட்மேன் வெப்சீரீஸ் தயாரிப்புக் குழு கூறியுள்ளது.

முன்னதாக, காட் மேன் வெப்சீரிஸின் டீசரில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அவமதிப்பதாக இருப்பதாக வந்த புகாரின் பேரில், இயக்குநர், தயாரிப்பாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

Also see:
First published: June 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading