சித்தார்த் மன்னிப்பு கேட்டதில் மகிழ்ச்சியடைவதாக ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றிற்கு சாய்னா நேவால் பேட்டியளித்துள்ளார்.
கடந்த ஜனவரி 5-ஆம் தேதி பஞ்சாபின் ஃபெரோஸ்பூருக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்பு குறைபாடு காரணமாக பாதியிலேயே திரும்பினார். இந்த விஷயம் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து நாட்டின் பிரதமருக்கே பாதுகாப்பு இல்லையா என சமூக வலைதளங்களில் பலர் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.
இந்நிலையில் பிரபல பேட்மிண்டன் பிளேயர் சாய்னா நேவாலும் ட்விட்டரில் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார். 'எனது சொந்த பிரதமரின் பாதுகாப்பில் சமரசம் ஏற்பட்டால் எந்த நாடும் பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது. அராஜகவாதிகளால் பிரதமர் மோடி மீது கோழைத்தனமான தாக்குதலை ஏற்படுத்தியதற்கு வலுவான வார்த்தைகளில் நான் கண்டிக்கிறேன்" என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
சாய்னாவின் இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த சித்தார்த், அவரை கொச்சைப்படுத்தியதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தது. இதையடுத்து தேசிய மகளீர் ஆணையம்
சித்தார்த்துக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யும்படி பரிந்துரை செய்தது. பெண் செயற்பாட்டாளர், பிரபலங்கள் என பலர் சித்தார்த்துக்கு எதிராக தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர்.
நடிகை நிதி அகர்வாலுடன் லிவிங் டுகெதரில் சிம்பு? விரைவில் திருமணம்?
இந்நிலையில் தனது நகைச்சுவை தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டதாகக் கூறி
சாய்னாவுக்கு தனது மன்னிப்பை தெரிவித்தார் சித்தார்த். இது குறித்து முன்னணி செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்திருக்கும் சாய்னா, “அவரே சொல்லிவிட்டு இப்போது மன்னிப்பு கேட்கிறார். அன்று ட்விட்டரில் நான்
ட்ரெண்ட் ஆனதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். நான் அவருடன் பேசவில்லை, ஆனால் அவர் மன்னிப்பு கேட்டதில் மகிழ்ச்சியடைகிறேன். இது பெண்களைப் பற்றியது, அவர் ஒரு பெண்ணை இப்படி குறிவைக்கக்கூடாது. ஆனால் பரவாயில்லை, அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை, என் இடத்தில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், கடவுள் அவரை ஆசீர்வதிப்பார்" என்று தெரிவித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.