சர்கார் மீம்ஸ் மூலம் மரண மாஸ் பாடலை கலாய்த்த கங்கை அமரன்

முழுப்பாடலையும் எஸ்பிபி பாடிருந்தால் இன்னும் சொல்லமுடியாத அளவுக்கு உயர்ந்திருக்கும் .. அனிருத் தவறாக பாடவில்லை . .. நன்றாக இருக்கிறது ஆனால்?” என்ற கேள்வியுடன் கங்கை அமரன் பதில் அளித்துள்ளார்.

Web Desk | news18
Updated: December 6, 2018, 8:58 AM IST
சர்கார் மீம்ஸ் மூலம் மரண மாஸ் பாடலை கலாய்த்த கங்கை அமரன்
ரஜினிகாந்த் | கங்கை அமரன்
Web Desk | news18
Updated: December 6, 2018, 8:58 AM IST
பேட்ட படத்தில் இடம் பெற்றுள்ள மரணமாஸ் பாடலில் எஸ்.பி.பி குறைந்த வரிகளே பாடியிருந்த நிலையில், பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் அதனை கிண்டல் செய்து ட்வீட் போட்டுள்ளார்.

ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள பேட்ட திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியாக உள்ளது. சமீபத்தில், படத்தில் இடம் பெற்றுள்ள மரண மாஸ் என்ற பாடல் வெளியிடப்பட்டது. குத்துப்பாடலாக உருவாகியுள்ள அது ரசிகர்கள் மத்தியில் விருந்தாக அமைந்தது.

ரஜினிகாந்த்


எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் அனிருத் இணைந்து இந்த பாடலை பாடியிருந்தனர். லிங்கா படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் படத்தில் எஸ்.பி.பி பாடியுள்ளார். ஆனால், பாடலில் அவருக்கு குறைந்த அளவிலேயே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஒருசாரர் கருத்து தெரிவித்து வருகின்றனர். எனினும், பாடலின் காட்சிகள் கருதி அப்படி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு மீம்ஸை பதிவிட்டுள்ளார். சர்கார் படத்திம் டிரைலரில், விஜய் தான் ஓட்டு போட வந்துவிட்டதாக கூறுவார், பின்னர் “அவர் ஓட்டை வேறு யாரோ போட்டுட்டாங்க” என்று வசனங்கள் வரும்.இந்த காட்சியைக் கொண்டு உருவாக்கப்பட்ட மீம்ஸை, கங்கை அமரன் பதிவிட்டுள்ளார். இதற்கு, ரஜினி ரசிகர்கள் காரசாரமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“அந்த பாடலில் ரஜினி பாடும் பகுதிய மட்டும் தான் எஸ்.பி.பி பாடியிருக்கிறார். மற்ற பகுதிகள் ரஜினி அவர்களை புகழ்வது போலுள்ளது. அவரை அவரே எப்படி புகழ்ந்து பாட முடியும். பாடலை முழுவதுமாக கேட்டுவிட்டு பொறுப்புடன் மீம்ஸ் போடுங்கள். வயது ஆகிவிட்டது அல்லவா” என்று ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.

இதற்கு, “என் பேரு படையப்பா... இளவட்ட நடையப்பா ... பாசமுள்ள மனுஷனப்பா.. நான் மீச வச்சகுழந்தையப்பா என்றும் நல்லதம்பி நானப்பா நன்றியுள்ள ஆளப்பா..... தாலாட்டி வள்ர்த்தது தமிழ்நாட்டு மண்ணப்பா......” என்ற படையப்பா பாடல் மூலம் கங்கை அமரன் பதில் கொடுத்துள்ளார்.அதாவது, படையப்பா படத்தில் ரஜினி புகழ் பாடும் வரிகளை ரஜினியே பாடுவது போல காட்சிகள் இருக்கும் என்று அவர் கூற முற்பட்டுள்ளார். “பொறுப்பு இருந்தா ஏன் மீம்ஸ் போடப்போகிறார்?” என்று ஒருவர் கேட்க, “என் நண்பர் ரஜினிக்கு என் இன்னொரு நண்பர் மீண்டும் பாடப்போகிறார் என்ற ஆவலுடன் தான் பாடலைக் கேட்டேன். சூப்பர் மிக அமக்களமாக இருந்தது .. ஆனால் இதே முழுப்பாடலையும் எஸ்பிபி பாடிருந்தால் இன்னும் சொல்லமுடியாத அளவுக்கு உயர்ந்திருக்கும் .. அனிருத் தவறாக பாடவில்லை . .. நன்றாக இருக்கிறது ஆனால்?” என்ற கேள்வியுடன் கங்கை அமரன் பதில் அளித்துள்ளார்.Also See..

First published: December 6, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...