Giant Super Hero - ஹாலிவுட் காங்குக்கு சவால் விடும் தமிழ் கபி

கபி

ராவணனின் தேசமான இலங்கை சென்று அதனை தீக்கிரையாக்குகிறது கபி.

  • Share this:
    இராம.நாராயணன் யானை, பாம்பு, நாய், குரங்கை வைத்து படம் இயக்கினார். ஆனால் அவரது மகன் பதினாறடி பாய்கிறார். கிராபிக்ஸில், ஹாலிவுட் காங் அளவுக்கு ஒரு கொரில்லாவை உருவாக்கியிருக்கிறார். அதன் சாகஸங்களை சொல்லும் பிரமாண்ட படைப்பே கபி.

    கதை, திரைக்கதையில் புதிய யுக்திகளை கையாளும் தமிழ் சினிமா (இந்திய சினிமா என்றும் சொல்லலாம்) பிரமாண்டம் என்று வருகையில் அடக்கியே வாசிக்கிறது. ஹாலிவுட்டில் ஆயிரம் இரண்டாயிரம் கோடிகளில் தயாராகும் படம் கடைகோடி ரசிகன் வரை செல்கிறது. அப்படியிருக்க, நூறு இருநூறு கோடியில் நாம் பிரமாண்ட படம் எடுத்து அது, டைட்டானிக்கை கட்டு மரத்தில் எடுத்தது போல் ஆகிவிடக் கூடாதே என்ற அச்சம். அதை மீறிய முயற்சியே இந்த கபி.

    ஹாலிவுட் காங் அளவுக்கு இருக்கிறது இவர்கள் உருவாக்கியிருக்கும் கொரில்லா குரங்கு கபி. ராவணனின் தேசமான இலங்கை சென்று அதனை தீக்கிரையாக்குகிறது கபி. டீஸரில் சொல்லப்படும் இந்தக் கதையை கேட்டால் கபி என்று இவர்கள் உருவாக்கியிருப்பது புராணத்தில் வருகிற ஹனுமானா என்ற கேள்வி எழுகிறது. கொரிலாவுக்கு வால் வைத்திருப்பது சந்தேகத்தை இன்னும் வலுப்படுத்துகிறது. கபியை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இணை தயாரிப்பு லிப்ரா புரொடக்ஷன்ஸ்.

    கௌஸிக், ராமசாமி இணைந்து எழுதியிருக்கும் இந்தக் கதையை, கோகுல்ராஜ் பாஸ்கர் இயக்குகிறார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் கபியை வெளியிடுகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: