ஹர்பஜன் சிங் - லாஸ்லியா நடிக்கும் ‘ஃப்ரெண்ட்ஷிப்’ படத்தின் நண்பர்கள் தின ஸ்பெஷல் வீடியோ ரிலீஸ்

நண்பர்கள் தினத்தை முன்னிட்டு ‘ஃப்ரெண்ட்ஷிப்’ படத்தின் புதிய வீடியோவை நடிகர் ராணா டக்குபதி வெளியிட்டுள்ளார்.

  • Share this:
ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கித் தயாரிக்கும் படம் ஃப்ரெண்ட்ஷிப். இந்தப் படத்தின் மூலம் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் கால் பதிக்க உள்ளார் பிக்பாஸ் லாஸ்லியா. அவர்களுன் நடிகர் அர்ஜுன், நகைச்சுவை நடிகர் சதீஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்னும் முடிவடையவில்லை. ஜூலை 4-ம் தேதி ஹர்பஜன் சிங் பிறந்தநாளை முன்னிட்டு ரஜினிகாந்த் (Superstar Anthem) என்ற பாடலை வெளியிட்டது. இந்தப் பாடலை நடிகர் சிம்பு பாடியிருந்தார்.

இந்நிலையில் இன்று நண்பர்கள் தினத்தை முன்னிட்டு ஃப்ரெண்ட்ஷிப் படத்தின் ஸ்பெஷல் வீடியோவை நடிகர் ராணா டக்குபதி வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இந்த வீடியோ வெளியிடப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.




ஃப்ரெண்ட்ஷிப் படத்தை அடுத்து சந்தானத்துடன் ‘டிக்கிலோனா’ படத்திலும் ஹர்பஜன் சிங் நடித்து வருகிறார்.
First published: July 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading