தமிழ் சினிமாவில் ஏறத்தாழ 25 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள பிரபல இசை அமைப்பாளரான யுவன்சங்கர் ராஜா. தனது பாடல்களாலும், பின்னணி இசையாலும் மாஸ் ஹீரோவுக்கு இணையாக ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் முதன்முதலில் ரீமிக்ஸ் பாடலை குறும்பு படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியது, BGM எனப்படும் பின்னணி இசைக்கான முக்கியத்துவம் கொடுத்து அதன்மூலம் திரைப்படங்களை வெற்றிபெற செய்வது என ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு யுவன் சங்கர் ராஜாவின் பங்கு மிக முக்கியமானதாக கருதப்பட்டது.
அஜித் நடிப்பில் வெளியான பில்லா, மங்காத்தா உள்ளிட்ட திரைப்படங்களின் வெற்றிக்கு யுவன் சங்கர் ராஜாவின் இசை அளப்பரிய பங்காற்றியது. இந்நிலையில், அஜித் நடிப்பில் உருவாகிவரும் "வலிமை" திரைப்படத்தின் பின்னணி இசை பணிகளை ஜிப்ரான் கவனித்து வருகிறார் என்ற அறிவிப்பு தற்போது யுவன்சங்கர் ராஜா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஒமிக்ரானால் தள்ளிப்போன பெரிய பட்ஜெட் படங்கள்!
யுவன் சங்கர் ராஜா இசையில் இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் வலிமை படத்தின் பின்னணி இசை கோர்ப்புப் பணிகளை இயக்குனர் வினோத்துடன் முந்தைய திரைப்படமான தீரன் திரைப்படத்திற்கு இசையமைத்த ஜிப்ரான் மேற்கொண்டு உள்ளதால் யுவன்சங்கர் ராஜாவுக்கும், வினோத்திற்கும் இடையே ஏற்பட்ட பனிப்போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
படத்தின் பின்னணி இசை அமைக்கும் பணிகளின்போது யுவன் சங்கர் ராஜா மற்றும் வினோத் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கும் சூழல் உருவானதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.
பின்னணி இசைக்காகவே பெயர் போன யுவன் ஷங்கர்ராஜா பணியாற்றும் திரைப்படத்தில் வேறு ஒரு இசையமைப்பாளர் பின்னணி இசை பணிகளை மேற்கொள்வது யுவன் சங்கர் ராஜாவுக்கு இழைக்கப்படும் அநீதி என அவரது ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் பொங்கி வருகின்றனர். அஜித் முன்பு நடித்த பில்லா, மங்காத்தா, ஆரம்பம் உள்ளிட்ட திரைப்படங்களில் அஜித் நடந்து வரும் சாதாரணக் காட்சிகளை ரசிகர்கள் ஆர்ப்பரிக்கும் மாஸ் காட்சிகளாக மாற்றிய யுவன் சங்கர் ராஜாவுக்கு இப்படி ஒரு நிலையா என திரை விமர்சகர்கள் பலரும் தற்போது வேதனையை வெளியிட்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.