Genelia Deshmukh: ’விஜய் இது உங்களுக்காக’ அடிப்பட்ட கையுடன் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு ஜெனிலியா நடனம்!

Genelia Deshmukh: ’விஜய் இது உங்களுக்காக’ அடிப்பட்ட கையுடன் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு ஜெனிலியா நடனம்!

விஜய் - ஜெனிலியா

”இது உங்களுக்காக விஜய்... உங்கள் வெற்றியை எப்போதும் கொண்டாடுகிறோம்’ எனக் குறிப்பிட்டு அந்த வீடியோவை பதிவிட்டிருக்கிறார்.

  • Share this:
    அடிப்பட்ட கையுடன் ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடிகை ஜெனிலியா நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    பிரபல நடிகை ஜெனிலியா தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் தனது வெளிப்படையான நடிப்பால் பார்வையாளர்களை கவர்ந்துள்ளார். பாய்ஸ், சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுதிரன், வேலாயுதம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். அதில் தனது துறுதுறுப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Genelia Deshmukh (@geneliad)






    பின்னர் பிரபல பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை 2012 இல் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். இந்த அழகான தம்பதியருக்கு ரியான் மற்றும் ரஹைல் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    சமீபத்தில் ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொண்டிருந்த போது, தவறி விழுந்து தனது இடது கை காயமடைந்து இருப்பதாகவும், தற்போது குணமடைந்து வருவதாகவும் சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார் ஜெனிலியா. இந்நிலையில் கையில் கட்டுடன், ‘மாஸ்டர்’ படத்தில் வரும் ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். ”இது உங்களுக்காக விஜய்... உங்கள் வெற்றியை எப்போதும் கொண்டாடுகிறோம்’ எனக் குறிப்பிட்டு அந்த வீடியோவை பதிவிட்டிருக்கிறார். தனது கணவர் ரித்தேஷ் மற்றும் நண்பர்களுடன் இணைந்து ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடியிருக்கிறார் ஜெனிலியா. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: