Home /News /entertainment /

Gehraiyaan - முறை தவறிய உறவுக்கு ரஷ்யாவில் முதலிடம்

Gehraiyaan - முறை தவறிய உறவுக்கு ரஷ்யாவில் முதலிடம்

ஹெகரியான்

ஹெகரியான்

Gehraiyaan movie : தீபிகா படுகோனே தனது சகோதரிக்கு நிச்சயிக்கப்பட்ட அவளது ஆண் நண்பன்  மீது காதல் கொள்கிறார்.

முறை தவறிய உறவை சொல்லும் தீபிகா படுகோனின் ஹெகரியான் திரைப்படத்திற்கு ரஷ்யாவில் முதலிடம் கிடைத்துள்ளது.

பிப்ரவரி 11ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் தீபிகா படுகோன் நடித்திருந்த ஹெகரியான் திரைப்படம் வெளியானது.
இதில் அவருடன் சித்தந்த் சதுர்வேதி, அனன்யா பாண்டே முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஷாகுன் பத்ரா படத்தை இயக்கியிருந்தார்.கதைப்படி தீபிகா படுகோனும், அனன்யா பாண்டேயும் ஒன்று விட்ட சகோதரிகள். இருவருக்கும் ஆண் நண்பர்கள் உண்டு. இந்த இரண்டு ஜோடிகளும் விடுமுறையை ஒன்றாக கழிக்கையில்  தீபிகா படுகோனே தனது சகோதரிக்கு நிச்சயிக்கப்பட்ட அவளது ஆண் நண்பன்  மீது காதல் கொள்கிறார்.

இதையும் படிங்க.. இன்று தான் கடைசி நாள்... பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு கிளம்புகிறாரா கமல்? இனிமேல் இவர் தானாம்!

இந்த முறைதவறிய உறவை பிரதானமாக சொல்லும் திரைப்படம்தான் ஹெகரியான்.  இன்றைய இளைஞர்களின் மனச்சிடுக்குகளை  படம் நுட்பமாக காட்சிப்படுத்தியிருந்தது.
இந்தப் படம் இந்தியாவில் அமேசான் பிரைம் வீடியோவில் அதிகம் பேர் பார்த்த திரைப்படம் என்ற பெருமையை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது.

அதேநேரம் ரஷ்யா, சிங்கப்பூர், யுஎஸ், யுகே போன்ற பல நாடுகளிலும் தரவரிசை பட்டியலில் இடம் பிடித்துள்ளது. வெளியான முதல் வாரத்தில் ரஷ்யாவில் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் அதிகம் பேர் பார்த்த திரைப்படங்களில் முதலிடத்தை தீபிகா படுகோனேயின் இந்தத்  திரைப்படம் பிடித்துள்ளது.

அப்பாவுக்கு போட்டியாக விஜய் டிவி நீயா நானா கோபிநாத் மகள் செய்த காரியம்!

சிங்கப்பூரில் இத்திரைப்படம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்காவில் இத்திரைப்படம் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. யுகே யில் ஆறாவது இடத்தை கைப்பற்றியுள்ளது.இவை தவிர வேறு சில நாடுகளிலும் டாப் 10 தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து ஹெகரியான்  இடம் பிடித்து வருகிறது.இந்தப் படத்தின் கதை காரணமாக இதனை porn  திரைப்படம் என்று கங்கனா ரணவத் விமர்சித்திருந்தார். இதுபோன்ற பல கதாபாத்திரங்களில் நீங்களும் நடித்திருக்கிறீர்கள் என்று தீபிகா படுகோன் அவருக்கு பதிலடி கொடுத்திருந்தார்.

இந்தியாவின் வலதுசாரிகள் இந்த படத்தை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் தொடர்ந்து பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sreeja
First published:

Tags: Actress Deepika padukone, Bollywood, OTT Release

அடுத்த செய்தி