Home /News /entertainment /

ஒரு இளைஞனை காதலிக்கும் இரு சகோதரிகள் - தீபிகாவின் முக்கோண காதல் கதை படம்

ஒரு இளைஞனை காதலிக்கும் இரு சகோதரிகள் - தீபிகாவின் முக்கோண காதல் கதை படம்

தீபிகா படுகோன்

தீபிகா படுகோன்

Deepika Padukone: கெஹரியான் திரைப்படத்தை ஷாகுன் பத்ரா இயக்கியுள்ளார். இது முக்கோண காதல் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
தீபிகா படுகோன் நடிப்பில் பிப்ரவரி 11 அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் படம் கெஹரியான். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சூட்டை கிளப்பியிருக்கும் நிலையில் தீபிகா படுகோன் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கெஹரியான் திரைப்படத்தை ஷாகுன் பத்ரா இயக்கியுள்ளார். இது முக்கோண காதல் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

சித்தார் சதுர்வேதி, அனன்யா பாண்டே இருவரும் இதில் காதலர்களாக வருகின்றனர். அனன்யா பாண்டேயின் சகோதரியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார்.

முக்கோண காதல் கதையில் வரும் அந்த மூன்றாவது நபர் தீபிகா படுகோன். சகோதரியின் காதலனை தீபிகா ஆட்டையை போடுவதுதான் கதையாம். சித்தார்த் சதுர்வேதி, தீபிகா சம்பந்தப்பட்ட நெருக்கமான காட்சிகள் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன.

தர்மா புரொடக்ஷன்ஸ், வயாகம்18, ஜோஷுகா ஃபிலிம்ஸ் இணைந்து படத்தை தயாரித்துள்ளன. நசுருதீன் ஷா, ரஜத் கபூர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இதில் தீபிகா படுகோன் அலிசா கன்னா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனன்யா பாண்டே டியா கன்னா என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

Also read... சிவகார்த்திகேயனின் அயலான் எப்படியிருக்கும்? - எடிட்டர் வெளியிட்ட தகவல்

குறிப்பிட்ட ஒரு நெருக்கமான காட்சியில் நடிக்க 48 டேக் வாங்கியதாக தீபிகா படுகோன் கூறியுள்ளார். முன்தீர்மானம் இல்லாமல் திடீரென அந்தக் காட்சியை யோசித்து எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திரையரங்கில் வெளியிடுவது என்றால் தணிக்கைச்சான்றிதழ் பெற வேண்டம் என்பதால் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடுகின்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actress Deepika padukone

அடுத்த செய்தி