முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'ஜோதிட சாஸ்திரப்படி கஷ்டமான வருஷம்..' - துருக்கி நிலநடுக்கம் குறித்து காயத்ரி ரகுராம் கருத்து

'ஜோதிட சாஸ்திரப்படி கஷ்டமான வருஷம்..' - துருக்கி நிலநடுக்கம் குறித்து காயத்ரி ரகுராம் கருத்து

துருக்கி நிலநடுக்கம் குறித்து காயத்ரி ரகுராம் ட்வீட்

துருக்கி நிலநடுக்கம் குறித்து காயத்ரி ரகுராம் ட்வீட்

மீட்பு பணிகள் நிறைவடைய கிட்டத்தட்ட பல மணிநேரம் பிடிக்கும் என்பதால் உயிர்சேதம் மற்றும் பொருள்சேதத்தின் முழுவிவரம் இன்று மாலை தான் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

துருக்கியை மையமாகக் கொண்டு இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோளில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக பல அடுக்குமாடி குடியிருப்பகுள் தரைமட்டமானது.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கமானது தென்கிழக்கு துருக்கியை மட்டுமல்லாது அண்டை நாடான சிரியாவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. லெபனான், இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.  இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து ஐரோப்பிய நாடான இத்தாலியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீட்பு பணிகள் நிறைவடைய கிட்டத்தட்ட பல மணிநேரம் பிடிக்கும் என்பதால் உயிர்சேதம் மற்றும் பொருள்சேதத்தின் முழுவிவரம் இன்று மாலை தான் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும் பாதிப்பை சந்தித்துள்ள தங்களுக்கு உதவ வேண்டும் என உலக நாடுகளிடம் துருக்கி கோரிக்கை வைத்துள்ளது.

இந்த நிலையில் நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ''துருக்கி நிலநடுக்கத்தில் பல கட்டிடங்கள் சரிந்தன. பல உயிர்கள் பலியாகின. ஜோதிட சாஸ்திரப்படி இந்த வருடம் கடினமாக இருக்கும். நல்ல எண்ணங்களாலும், நல்ல செயல்களாலும் உலகை குணப்படுத்துவோம். துருக்கிக்காக எனது பிரார்த்தனைகள்'' என பதிவிட்டுள்ளார்.

First published:

Tags: Earthquake, Gayathri Raguramm, Turkey