Home /News /entertainment /

AR Rahman: ஊருக்கு மட்டும் தான் உபதேசம்... ஏ.ஆர்.ரஹ்மானை விமர்சித்த காயத்ரி ரகுராம்

AR Rahman: ஊருக்கு மட்டும் தான் உபதேசம்... ஏ.ஆர்.ரஹ்மானை விமர்சித்த காயத்ரி ரகுராம்

காயத்ரி ரகுராம் - ஏ.ஆர்.ரஹ்மான்

காயத்ரி ரகுராம் - ஏ.ஆர்.ரஹ்மான்

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், தனது சமூக வலைதளத்தில் தமிழன்னையின் ஓவியத்தைப் பகிர்ந்து ’தமிழணங்கு’ எனக் குறிப்பிட்டிருந்தார். இது இந்திய அளவில் பேசு பொருளானது.

    தமிழ் தான் இணைப்பு மொழி என்ற ஏ.ஆர்.ரஹ்மான், ஜெய்ஹோ என்ற இந்தி பாடலுக்கு தான் ஆஸ்கர் விருதை வென்றார்.

    டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியை தேசிய மொழியாக்க வேண்டும். ஆங்கிலத்துக்கு மாற்று இந்தி தான். இந்தி பேசாத மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலத்துக்குப் பதில் இந்தி பேச வேண்டும். இந்தியை, ஆங்கிலத்துக்கு மாற்றான மொழியாக கொண்டு வரும் தருணம் வந்து விட்டது என்றார்.

    அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு அரசியல்வாதிகளும், திரைத்துறையினரும் தங்கள் கண்டனத்தை சமூக வலைதளங்களில் தெரிவித்தனர். அப்போது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், தனது சமூக வலைதளத்தில் தமிழன்னையின் ஓவியத்தைப் பகிர்ந்து ’தமிழணங்கு’ எனக் குறிப்பிட்டிருந்தார். இது இந்திய அளவில் பேசு பொருளானது.

    முன்பதிவிலேயே ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தை பின்னுக்கு தள்ளிய விஜய்யின் பீஸ்ட்!

    பின்னர் சிஐஐ சார்பில் நடைபெற்ற தென்னிந்திய ஊடக பொழுதுபோக்கு கருத்தரங்கில் பேசிய ரஹ்மான், ”ஏழு வருடங்களுக்கு முன்பு மலேசியா சென்றிருந்த போது சந்தித்த சீனாவைச் சேர்ந்த ஒருவர், நீங்கள் இந்தியரா, எனக்கு வட இந்தியர்களை மிகவும் பிடிக்கும், அவர்களின் படங்கள் மிகவும் அருமையாகவும், வடஇந்தியர்களும் அழகாகவும் இருப்பார்கள் என்றார். அவர் தென்னிந்திய படங்களை பார்த்திருக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் அவர் சொன்னது என்னை மிகவும் பாதித்தது. மக்கள் வண்ணங்களால் தங்களின் அடையாளத்தை, கெளரவத்தை நிலைநாட்ட விரும்புகிறார்கள் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. நாமும் வண்ணத்தை விரும்புகிறோம். நாம் அதை சிறந்த முறையில் வெளிப்படுத்த வேண்டும். மற்றவர்கள் நம்முடைய படங்களை பார்க்கும் போது தலைநிமிர்ந்து பார்க்க வேண்டும். அப்படி படம் எடுக்க வேண்டும்" என்றார்.

    திரை தீ பிடிக்கும்... ஒருத்தன் வந்தா படை நடுங்கும்... பீஸ்ட் 3-வது பாடல்!



    நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த ஏ.ஆர்.ரஹ்மானிடம் அமித்ஷா கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் தமிழ் தான் இணைப்பு விஷயம் என்றார். இந்நிலையில் தற்போது பிரபல இணையதளத்திற்கு பேட்டியளித்துள்ள பாஜக-வின் காயத்ரி ரகுராம், 'ஜெய்ஹோ என்ற இந்தி பாடலுக்கு ரஹ்மான் ஆஸ்கர் விருதை வென்றார். அப்போது நான் இந்த பாடலை தமிழில் பாடவில்லை என்பதால், எனக்கு இந்த விருது தேவை இல்லை என்று கூறினாரா? ஊருக்கு மட்டும் உபதேசம் செய்யக் கூடாது. நாமும் அதை செய்ய வேண்டும்’ என விமர்சித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: AR Rahman, Gayathri Raghuram, Tamil Cinema

    அடுத்த செய்தி