இணையத் தாக்குதல்களை நிறுத்துங்கள் - விஜயலட்சுமி விவகாரத்தில் காயத்ரி ரகுராம் காட்டம்

இணைய தாக்குதல்களை நிறுத்துங்கள் என்று காயத்ரி ரகுராம் காட்டமாக தெரிவித்துள்ளார்.

இணையத் தாக்குதல்களை நிறுத்துங்கள் - விஜயலட்சுமி விவகாரத்தில் காயத்ரி ரகுராம் காட்டம்
காயத்ரி ரகுராம்
  • Share this:
பாஸ் என்கிற பாஸ்கரன், ப்ரெண்ட்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் வெளியிட்டிருந்த வீடியோவில் சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினரை குற்றம்சாட்டியிருந்ததோடு, சீமான் மற்றும் ஹரி நாடாரைக் கைது செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

நடிகை விஜயலட்சுமிக்குத் தேவையான உதவிகளை செய்துள்ள காயத்ரி ரகுராம், தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “விஜயலட்சுமி தற்போது நலமாக இருக்கிறார். சமூக வலைதள மிரட்டல்கள் மற்றும் அவதூறுகளால் மிகவும் அதிர்ச்சியடைந்திருந்தார். ஒரு தனிப்பட்ட போராடும் பெண்ணாக அவர், நிறைய விஷயங்களை எதிர்கொண்டுள்ளார். இணையதள தாக்குதல்களை நிறுத்துங்கள்.

முக்கிய காரணங்களால் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. உலகம் அவரை சரியாக நடத்தவில்லை. அதுதான் அவரை தள்ளிக் கொண்டுவந்து இதைசெய்ய வைத்துள்ளது. நடிகர் சங்கம் அவருக்கு உதவி வருகிறது.
தயதுசெய்து என்னை நேர்காணலுக்கு அழைக்காதீர்கள். கருத்துக்களை வழங்குவதற்கும், அதனை அரசியலாக்குவதற்கும் நான் இங்கு இல்லை. ஒரு பெண் கஷ்டப்படும்போது அதனை ஊடகங்கள் வீடியோ எடுத்து உதவி செய்யாமல் இருப்பதை நான் வெறுக்கிறேன். ஒருவர் வாழ்க்கையிலிருந்து பணம் சம்பாதிக்கவும், டி.ஆர்.பிக்காவும் இது பயன்படுகிறது. அந்தக் குடும்பத்தை தனியாக இருக்கவிடுங்கள். அந்தக் குடும்பத்திற்கு உதவுவதற்காக நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். யாராவது உதவ முடியும் என்றால் தயவுசெய்து எங்களுடன் சேருங்கள்".என்று கூறியுள்ளார்.
First published: July 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading