• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த கௌதம் வாசுதேவ மேனன்

சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த கௌதம் வாசுதேவ மேனன்

கெளதம் மேனன் - சிவகார்த்திகேயன்

கெளதம் மேனன் - சிவகார்த்திகேயன்

ரொமான்டிக் காமெடியாக தயாராகும் இந்தப் படத்தில் கௌரவ வேடத்தில் கௌதம் நடித்துள்ளார்.

  • Share this:
    சிவகார்த்திகேயன் படத்தில் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன்.

    கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம், ஜோஷ்வா இமை போல் காக்க ஆகிய படங்கள் தயாராகி இன்னும் வெளியாகாமல் உள்ளன. அதோடு வெந்து தணிந்தது காடு படத்தை சிம்புவை வைத்து இயக்கி வருகிறார். இதனிடையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவும் பேச்சுவார்த்தை நடக்கிறது. ஐசரி கணேஷ் அனேகமாக இந்தப் படத்தை தயாரிக்கலாம். இத்தனை பிஸி ஷெட்யூல்டில் அவ்வப்போது படங்களில் நடிக்கவும் செய்கிறார் கெளதம். கடைசியாக அவர் நடித்திருப்பது சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம்.

    டான் படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்க, ப்ரியங்கா அருள் மோகன் நாயகியாக நடித்து வருகிறார். இதன் சமீபத்திய படப்பிடிப்பு ஆக்ராவில் நடந்தது. தாஜ்மஹாலில் ஒரு பாடல் காட்சியும் எடுக்கப்பட்டது. ரொமான்டிக் காமெடியாக தயாராகும் இந்தப் படத்தில் கௌரவ வேடத்தில் கௌதம் நடித்துள்ளார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டுவிட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் அக்டோபர் 9-ம் தேதி திரைக்கு வருகிறது. இதையடுத்து டான், அயலான் படங்கள் வெளியாகும். டான் படத்தை முடித்த பின் அட்லியின் உதவி இயக்குனரின் சிங்கப்பாதை படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: