இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வருண் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜோஷ்வா : இமைபோல் காக்க' திரைப்படம், ஓடிடியில் வெளியாகும் என தகவல்கள் வெளிவந்துள்ளது.
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஜோஷ்வா இமைபோல் காக்க திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் வருண், கிருஷ்ணா, ராஹி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிரபல பின்னணி பாடகர் கார்த்திக் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
யோகிபாபு, மன்சூர் அலிகான், விசித்திரா, திவ்ய தர்ஷினி உள்ளிட்டோர் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளனர். நீண்ட நாட்களுக்கு முன்னரே அனைத்து பணிகளும் முடிக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியீட்டிற்காக காத்திருக்கிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரெய்லர் காட்சிகள், எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க :
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி - படத்தின் பெயர், பர்ஸ்ட் லுக் வெளியீடு!
இந்நிலையில், ஜோஷ்வா திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படத்தில் ஒரு பெண்ணின் பாதுகாவலராக பாடி கார்டு கேரக்டரில் வருண் நடித்துள்ளார். லண்டனில் இருந்து சென்னைக்கு வரும் அந்தப் பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்கிறார் வருண்.
2020-லேயே இந்த திரைப்படம் திரைக்கு வரவேண்டி இருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக வெளியீட்டு தேதிகள் தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், ஜோஷ்வா படம் குறித்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறியதாவது-
ஜோஷ்வா படத்தின் அனைத்து பணிகளும் நிறைவு பெற்று, ரிலீசுக்கு படம் தயாராக இருக்கிறது. இதனை அடுத்த மாதம் வெளியிடலாம் என்ற திட்டத்தில் இருந்தோம். ஆனால், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திட்டமிட்டபடி வெளியிட முடியாது. தற்போது இந்த படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடலாம் என்ற முடிவில் இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க :
கார்த்தியிடம் கதை சொன்ன பேச்சிலர் பட இயக்குனர்...!இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.