வெற்றிமாறன் படத்தில் நடிக்கும் கவுதம் மேனன் - எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் ‘விடுதலை’

வெற்றிமாறன் - கவுதம் மேனன்

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் விடுதலை திரைப்படத்தில் வெற்றிமாறன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 • Share this:
  அசுரன் பட வெற்றியை அடுத்து ‘பாவக் கதைகள்’ ஆந்தாலஜி படத்தின் ஒரு கதையை இயக்கிய வெற்றிமாறன் அடுத்ததாக சூரி ஹீரோவாக நடிக்கும் விடுதலை திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஜெயமோகனின் ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் நடைபெற்றது.

  எல்ரெட் குமார் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்க சிக்ஸ் பேக் வைத்து தனது உடலமைப்பை மாற்றியுள்ளார் சூரி. சமீபத்தில் வெளியான ‘விடுதலை’ படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாலும், இளையராஜா இசைமயமைப்பதாலும் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

  மேலும் இத்திரைப்படத்தில் இயக்குநர் கவுதம் மேனன் காவல்துறை உயர் அதிகாரியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் பிரதாப் சகரவர்த்தி என்ற காவல்துறை அதிகாரியாக நடிப்பில் மிரட்டியிருந்த கவுதம் மேனனை வெற்றிமாறன் படைப்பில் பார்க்க அனைவரிடமும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

  விடுதலை படத்தை அடுத்து சூர்யாவின் வாடிவாசல் திரைப்படத்தை இயக்க இருக்கிறார் வெற்றிமாறன்.
  Published by:Sheik Hanifah
  First published: