நாயாட்டு தமிழ் ரீமேக்கை இயக்கும் கௌதம் மேனன்?

கெளதம் மேனன்

தமிழில் ஐசரி கணேசனின் வேல்ஸ் இன்டர்நேஷனல் பெரும் தொகைக்கு இதன் உரிமையை கேட்டுள்ளது.

 • Share this:
  மலையாளத்தில் இந்த வருடம் வெளியான திரைப்படம் நாயாட்டு. இதன் தமிழ் ரீமேக்கை வாங்க கடும் போட்டி நிலவுகிறது. அனேகமாக இந்த ரீமேக்கை கௌதம் இயக்கக்கூடும் என்கின்றன செய்திகள்.

  மார்டின் ப்ரக்கட் இயக்கிய திரைப்படமான நாயாட்டு, மூன்று போலீஸ்காரர்கள், தாங்கள் செய்யாத குற்றத்துக்காக எப்படி அரசியல் சுழலில் மாட்டிக் கொள்கிறார்கள் என்பதை பேசிய படம். இதில் தலித்களை தவறாக சித்தரித்திருப்பதாக தமிழகத்தில் (கேரளாவில் அல்ல) சின்ன சலசலப்பு உருவானது. மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்ட சர்வைவல் த்ரில்லர் திரைப்படமாக நாயாட்டு பாராட்டப்பட்டது. 2021 முதல் அரையாண்டில் உலக அளவில் வெளியான சிறந்த 25 திரைப்படங்களுள் ஒன்றாக இப்படம் தேர்வானது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  நாயாட்டுக்கு முன்பு மார்டின் ப்ரக்கட் இயக்கிய படம் சார்லி. 2015-ல் இந்தப் படம் வெளியானது. இதை மாறா என்ற பெயரில் தமிழில் மாதவன் நடிப்பில் ரீமேக் செய்தனர். நாயாட்டு படத்தின் தெலுங்கு உரிமையை அல்லு அரவிந்தும், இந்தி உரிமையை ஜான் ஆபிரஹாமும் வாங்கியுள்ளனர். தமிழில் ஐசரி கணேசனின் வேல்ஸ் இன்டர்நேஷனல் பெரும் தொகைக்கு உரிமையை கேட்டுள்ளது.

  ஐசரி கணேஷ் தயாரிப்பில் சிம்பு நடிப்பில் நதிகளிலே நீராடும் சூரியன் படத்தை கௌதம் இயக்கி வருகிறார். நாயாட்டு தமிழ் ரீமேக் உரிமை ஐசரி கணேஷுக்கு கிடைத்தால் கௌதம் ரீமேக்கை இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் சில தினங்களில் இந்த உரிமை யார்வசம் செல்லப்போகிறது என்பது தெரிந்துவிடும்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: