கதை பிடிக்கவில்லையா... எவ்வளவு பணம் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்... ஓடி விடுவேன் - கவுதம் மேனன் பரபரப்பு பேச்சு!

கதை பிடிக்கவில்லையா... எவ்வளவு பணம் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்... ஓடி விடுவேன் - கவுதம் மேனன் பரபரப்பு பேச்சு!
இயக்குநர் கவுதம் மேனன்
  • Share this:
ஒரு கதையோ அல்லது கதாபாத்திரமோ எனக்கு பிடிக்கவில்லை என்றால் எவ்வளவு பணம் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்று இயக்குநர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.

தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. மேலும் இயக்குநர் கவுதம் மேனன், ரக்‌ஷன், ரீது வர்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து படக்குழு இன்றி நன்றி தெரிவிக்கும் விழா நடத்தியது.

அதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் கவுதம் மேனன், “‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம் ஒரு பெரிய நம்பிக்கை. ‘அசுரன்’, ‘ஒ மை கடவுளே’ திரைப்படத்தைத் தொடர்ந்து திரையரங்குகளில் அதிகமாக மக்கள் இருக்கும் திரைப்படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ தான். இது மிகப்பெரிய சந்தோஷம் எனக்கு. இயக்குநர் தேசிங் பெரியசாமியின் இயல்பு எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. அதனால் தான் இந்தத் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.


ஒரு கதையோ இல்லை அந்த கதாப்பாத்திரமோ, எனக்கு பிடிக்கவில்லை, என்றால் எவ்வுளோ பணம் தந்திருந்தாலும் கூட அந்த திரைப்படத்தில் நான் நடித்திருக்கமாட்டேன். வேறு ஒரு திரைப்படத்தில் கூட  இப்படி ஒரு சம்பவம் நடந்தது.

அந்தப் படத்தின் கதை எனக்கு பிடிக்கவில்லை படப்பிடிப்பு என எதுவும் சரியாக போகவில்லை என்று தெரிந்தும் பாதியில் நான் வந்துவிட்டேன். பொதுவாக இதைப் பற்றி நான் பேசக்கூடாது இருந்தும், இதை இங்கு கூற கடமைப்பட்டுள்ளேன்.

முதன் முதலில் ‘கோலி சோடா’ இரண்டாம் பாகத்தில் நடித்தது தான் என்னுடைய முதல் படம். அதில் என்னை நடிகனாக நடிக்க வைத்த இயக்குநர் விஜய் மில்டனுக்கு பெரிய நன்றி. ஒரு உத்வேகத்தைக் கொடுத்தார். அதைத் தொடர்ந்து ஒரு பெரிய கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி” என்றார்.மேலும் படிக்க: பா.ரஞ்சித் படத்தில் ஆர்யாவுடன் மோதும் மற்றொரு ஹீரோ!
First published: March 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading