Home /News /entertainment /

இறங்கி எதாச்சும் செய்யலாமான்னு தோணுது... ப்ளூ சட்டை மாறன் மீதான கோபத்தை வெளிப்படுத்திய கெளதம் மேனன்

இறங்கி எதாச்சும் செய்யலாமான்னு தோணுது... ப்ளூ சட்டை மாறன் மீதான கோபத்தை வெளிப்படுத்திய கெளதம் மேனன்

ப்ளூ சட்டை மாறன் - கெளதம் மேனன்

ப்ளூ சட்டை மாறன் - கெளதம் மேனன்

ஒரு படத்தை கலாய்த்து விமர்சனம் செய்வது, அவரது யூடியூப் பக்கத்தில் நிறைய பார்வையாளர்கள் பார்ப்பதற்கும், அதன் மூலம் அவருக்கு நிறைய விளம்பரங்கள் கிடைப்பதற்காகவும் தான்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    எதாச்சும் இறங்கி செய்யலாமான்னு தோணுது’ என சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் குறித்து கோபமாக பேசியுள்ளார் இயக்குநர் கெளதம் மேனன். 

    இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இதில் சித்தி இதானி ஹீரோயினாக நடித்துள்ளார். படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். இப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் சிம்புவின் நடிப்பு பரவலாக பாராட்டப்படுகிறது.

    வெந்து தணிந்தது காடு படத்தை கடுமையாக விமர்சித்திருந்தார் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன். இதையடுத்து சமீபத்திய நேர்க்காணல் ஒன்றில் அவர் மீதான தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர் கெளதம் மேனன்.



    இது பற்றி பேசிய அவர், “சொல்லக்கூடாதுனு நினைக்கிறேன். ஆனா எனக்கு பயங்கர கடுப்பாகுது. ஒரு படத்தை கலாய்த்து விமர்சனம் செய்வது, அவரது யூடியூப் பக்கத்தில் நிறைய பார்வையாளர்கள் பார்ப்பதற்கும், அதன் மூலம் அவருக்கு நிறைய விளம்பரங்கள் கிடைப்பதற்காகவும் தான். நீங்கள் விமர்சனம் பண்ணுங்கள். ஆனால் படத்தை கலாய்க்காமல் பண்ணுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பொன்னியின் செல்வன் மேக்கிங் ஸ்டில்ஸ்!

    அவரின் திருச்சிற்றம்பலம் விமர்சனத்தில் படத்தை முதல் 10 நிமிடங்கள் கழுவி ஊற்றுகிறார். நடுவில் ஒரு இடத்தில் படம் நன்றாக இருக்கிறது என்கிறார். இறங்கி எதாவது செய்யலாமா என்ற அளவுக்கு அவர் மீது கோபம் வருது. மற்ற இயக்குனர்களுக்கு எப்படி இருக்குன்னு தெரியல, ஆனா எனக்கு உண்மையிலே இறங்கி ஏதாவது செய்யலாமான்னு இருக்கு” என்று தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Gautham Vasudev Menon, Simbu

    அடுத்த செய்தி