• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • எனக்கு தெரியாம நான் நடிக்கிற படமா? - அதிர்ச்சியான கௌதம் வாசுதேவ மேனன்!

எனக்கு தெரியாம நான் நடிக்கிற படமா? - அதிர்ச்சியான கௌதம் வாசுதேவ மேனன்!

அன்புச்செல்வன்

அன்புச்செல்வன்

காலையிதான் இந்த போஸ்டர் வெளியானது. கௌதம் துப்பாக்கியுடன் இருக்க, வினோத் குமார் படத்தை இயக்குவதாகவும் செவன்டி எம்எம் ஸ்டுடியோஸ் மகேஷ் படத்தை தயாரிப்பதாகவும் அந்தப் போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கௌதம் வாசுதேவ மேனன் கதாநாயகனாக நடிக்கும் பட அறிவிப்பு வந்த சில மணித்துளிகளில், அப்படியொரு படம் பற்றி எனக்குத் தெரியாது என அதிர்ச்சி விளக்கம் அளித்துள்ளார் இயக்குனர் கௌதம்.

காக்க காக்க படத்தில் வரும் அசிஸ்டெண்ட் கமிஷனர் அன்புச்செல்வன் கதாபாத்திரம் அனைவருக்கும் பிடிதமானது. அன்புச்செல்வன் என்றால் காக்க காக்க படமும் சூர்யாவின் கம்பீரமான தோற்றமும் மனதில் வரும். அந்த கதாபாத்திரத்தை உருவாக்கி மெருகேற்றியவர் இயக்குனர் கௌதம். அவர் அன்புச்செல்வன் என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார் என்று கௌதம் துப்பாக்கியுடன் நிற்கும் புகைப்படத்துடன் போஸ்டர் வந்தால் என்ன நினைப்பீர்கள். சூப்பர்டா... ஒரு சூப்பர் காப் ஸ்டோரி வரப்போகுது என்றுதானே நினைப்போம். அங்குதான் ட்விஸ்ட்.



காலையிதான் இந்த போஸ்டர் வெளியானது. கௌதம் துப்பாக்கியுடன் இருக்க, வினோத் குமார் படத்தை இயக்குவதாகவும் செவன்டி எம்எம் ஸ்டுடியோஸ் மகேஷ் படத்தை தயாரிப்பதாகவும் அந்தப் போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது வெளியான சில மணி நேரங்களில் கௌதம் இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்



Also read... ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் சமந்தாவுடன் நடிக்க விருப்பமா?

இந்த செய்தி எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இந்தப் படம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. போஸ்டரில் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த இயக்குனரை நான் சந்தித்ததும் இல்லை. எளிதாக இதுபோல் ஒன்றை செய்ய முடிவது அதிர்ச்சியாகவும், பயமாகவும் உள்ளது என கௌதம் கூறியுள்ளார்



முகம் அறிந்த பல இயக்குனர்கள் இந்த போஸ்டரை ட்வீட் செய்திருப்பது இன்னும் அதிர்ச்சி அளிக்கிற சம்பவம். யாரேனும் வேண்டுமென்றே செய்த வேலையா இல்லை ஏமாற்று மோசடித் திட்டமா? உண்மை வெளிவரும் என்று நம்புவோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: