Gautham Menon: சிம்பு படத்துக்காக எழுத்தாளர் ஜெயமோகனுடன் இணையும் கௌதம் மேனன்!

சிம்பு - கெளதம் மேனன்

நதிகளிலே நீராடும் சூரியன் படத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் முதல்முறையாக கௌதமுடன் இணைகிறார்.

  • Share this:
    வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரிப்பில் சிம்பு நடிப்பில் இரு படங்களை கௌதம் இயக்குகிறார். இதில் முதல் படத்தில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் முதல்முறையாக கைகோர்க்கிறார் கௌதம்.

    கௌதமின் படம் இயக்கும் ஸ்டைல் வித்தியாசமானது. கொஞ்ச நாள் முன்புவரை, எந்த எழுத்தாளரும் எனக்கு செட்டாக மாட்டார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவரே தான் கதையை எழுதுவார். அதுவும் கால்வாசி எழுதிக் கொண்டு படப்பிடிப்புக்கு போய், அங்கு எடுக்கப்படும் காட்சிகளுக்கேற்ப, மீதி படத்தை எடுப்பார். காக்க காக்க, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா எல்லாம் இப்படி எடுத்து வெற்றி பெற்றதே. ஆனால், இந்த கால்வாசி ட்ரீட்மெண்டால் தோல்வியடைந்த படங்களே அதிகம். அதனால் தான், துருவ நட்சத்திரம் படத்தின் ஸ்கிரிப்டை முழுமையாக எழுதிக் கொண்டு வாருங்கள் என்று சூர்யா சொல்ல, கௌதம் மறுக்க, அந்த வெற்றிக் கூட்டணி பிரிந்தது. என்னை அறிந்தால் படத்தை இதேபோல் எடுத்து, கிளைமாக்ஸில் என்ன செய்வதென்று தெரியாமல் ஸ்ரீகர் ராகவன் மற்றும் தியாகராஜன் குமாரராஜாவின் உதவியை கௌதம் நாடியது தனிக்கதை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நிகழ்காலத்துக்கு வருவோம். ஐசரி கணேஷ் தயாரிப்பில் சிம்பு நடிப்பில் கௌதம் இயக்கும் நதிகளிலே நீராடும் சூரியன் படத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் முதல்முறையாக கௌதமுடன் இணைகிறார். படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தில் ஜெயமோகன் பங்காற்றுவார் என தெரிகிறது.

    எழுத்தாளர் சுஜாதாவின் மறைவுக்குப் பிறகு முன்னணி இயக்குனர்கள் சரியான எழுத்தாளர்கள் அமையாமல் சங்கடப்படுகின்றனர். அவர்களுக்கு கிடைத்திருக்கும் ஒரே நபர் ஜெயமோகன். மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், வெற்றிமாறனின் விடுதலை ஆகியவற்றில் ஜெயமோகன் பங்களிப்பு செலுத்தியுள்ளார். இதில் விடுதலை படம் ஜெயமோகன் எழுதிய சிறுகதையை அடிப்படையாக வைத்து தயாராகிறது. ஷங்கரின் 2.0 படத்திலும் ஜெயமோகன் பணிபுரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னணி இயக்குனர்கள் ஜெயமோகனை தொடர்ந்து நாடுவதற்கு அவரது வேகம் முக்கிய காரணம். ஒருவரி சொன்னால் மறுநாள் அந்த வரியை 300 பக்கங்களுக்கு கதையாக்கி அனுப்பி வைப்பார். கரெக்ஷன் சொன்னால் அடுத்த நாள் அடுத்த 300 பக்கம். ஒருவரி கதையைச் சொன்ன அடுத்த நாளே முழு ஸ்கிரிப்டுடன் படப்பிடிப்புக்கு கிளம்பலாம். ஏன் ஜெயமோகனை விரும்ப மாட்டார்கள்?

    கௌதமின் நதிகளிலே நீராடும் சூரியனுக்கு ரஹ்மான் இசையமைக்கிறார். விரைவில் படப்பிடிப்புக்கு கிளம்பயிருக்கிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: