Home /News /entertainment /

இயக்குனர் கவுதம் மேனனின் அடுத்த படத்தின் ஹீரோ இவர்தானா?

இயக்குனர் கவுதம் மேனனின் அடுத்த படத்தின் ஹீரோ இவர்தானா?

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தி நடிப்பில் மிரட்டிய கவுதம் மேனனுக்கு, நடிக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. மலையாளத்தில் வெளியான ட்ரான்ஸ் படத்திலும் அசத்தலாக நடித்து கவுதம் மேனன் கவனத்தை ஈர்த்திருப்பார்.

    வெற்றிப்பட இயக்குனர் கவுதம் மேனன் இயக்கவுள்ள அடுத்தபடம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.

    சிம்பு நடிப்பில் ஐசரி கணேஷ் தயாரித்து வரும் வெந்து தணிந்தது காடு படத்தை கவுதம் மேனன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்சன் வேலைகள் நடந்து வருகின்றன.

    சிம்பு - கவுதம் மேனன் - ஏ.ஆர். ரகுமான் கூட்டணியில் , விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்கள் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் இந்த கூட்டணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கவுதம் மேனன் இயக்கியிருந்த துருவ நட்சத்திரம் படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டீசர், டிரெய்லர் காட்சிகள் வெளியாகி படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்திருந்தது. இந்தாண்டு இந்த திரைப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நடிகர் வருணை வைத்து ஜோஷ்வா என்ற படத்தையும் கவுதம் மேனன் இயக்கியுள்ளார்.

    இதையும் படிங்க : விண்வெளியில் ஒலிக்கவிருக்கும் இளையராஜா பாடல்!

    கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தி நடிப்பில் மிரட்டிய கவுதம் மேனனுக்கு, நடிக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. மலையாளத்தில் வெளியான ட்ரான்ஸ் படத்திலும் அசத்தலாக நடித்து கவுதம் மேனன் கவனத்தை ஈர்த்திருப்பார்.

    இந்நிலையில், ஐசரி கணேஷ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தை இயக்க கவுதம் மேனன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க : 3 நிமிட பாடலுக்கு 5 கோடிக்கும் மேல் வசூலித்த சமந்தா?
    Published by:Musthak
    First published:

    Tags: Gautham Vasudev Menon

    அடுத்த செய்தி