Home /News /entertainment /

விக்ரமுடன் கெளதம் மேனன்... புத்துயிர் பெறும் துருவ நட்சத்திரம்?

விக்ரமுடன் கெளதம் மேனன்... புத்துயிர் பெறும் துருவ நட்சத்திரம்?

கெளதம் மேனன் - விக்ரம்

கெளதம் மேனன் - விக்ரம்

விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா நடிப்பில் துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பு 2016-ல் தொடங்கப்பட்டது.

    நடிகர் விக்ரமுடன் எடுத்துக் கொண்ட படங்களை இயக்குநர் கெளதம் மேனன் தனது இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார். இது நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் துருவ நட்சத்திரம் படம் குறித்த ஆர்வத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

    படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்ற குறிப்பை இயக்குனர் சூசகமாக குறிப்பிட்டுள்ளதால், துருவ நட்சத்திரம் படம் விரைவில் புத்துயிர் பெறும் எனத் தெரிகிறது. விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா நடிப்பில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2016-ல் தொடங்கப்பட்டது. 2018-ல் படப்பிடிப்பை முடிக்க முயற்சித்தனர் படக்குழுவினர். ஆனால் சில நிதி சிக்கல்களால் படம் கிடப்பில் போடப்பட்டது.



    இந்நிலையில் விக்ரமுடன் எடுத்துக் கொண்ட படங்களை இன்ஸ்டகிராமில் பதிவிட்ட இயக்குநர் கெளதம் மேனன், ’நட்சத்திரங்கள் இணையும்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதன்படி துருவ நட்சத்திரம் திரைப்படம் விரைவில் திரைக்கும் வரும் என கருதுகின்றனர் ரசிகர்கள்.



     




    View this post on Instagram





     

    A post shared by Gautham Menon (@gauthamvasudevmenon)






    முதல்வரை நேர்ல பாத்துட்டேன்... செஸ் ஒலிம்பியாட் துவக்க நிகழ்வில் பாடியது குறித்து கிடாக்குழி மாரியம்மாள்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஸ்பை த்ரில்லர் களத்தில் இயக்கப்பட்டுள்ள துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ரிது வர்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி மற்றும் விநாயகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தின் முதல் சிங்கிள் ‘ஒரு மனம்’ என்ற பாடல் ஏற்கனவே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Vikram, Gautham Vasudev Menon

    அடுத்த செய்தி