வயகாம்18 நிறுவனத்தின் தமிழ் பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ், வார இறுதி நாட்களில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பார்த்து ரசிக்க கூடிய அதிரடி மற்றும் சாகசங்கள் நிறைந்த இந்திரஜித்’ திரைப்படத்தை பிரீமியராக ஒளிபரப்ப உள்ளது. கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த அனைவரையும் ஈர்க்க கூடிய இந்த சுவாரஸ்யமான திரைப்படத்தைக் காண நாளை மதியம் 2 மணிக்கு உங்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள்.
இயக்குனர் கலாபிரபு, தனது முதல் படமான 'சக்கர கட்டி' மூலம் மக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய பிறகு, பல புகழ்பெற்ற ஆங்கில கிளாசிக் படங்களில் மிகவும் ஈர்க்கப்பட்டு அதிரடி-சாகச கதைகளத்திற்கு தனது கவனத்தைத் திருப்பி அதன் மூலம் இந்திரஜித் படத்தை அவர் இயக்கியிருக்கிறார். குறிப்பாக மூத்த நடிகர்களான சச்சின் கடேகர் மற்றும் சுதன்ஷு பாண்டே ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்திருப்பது படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.
தனித்துவமான மருத்துவப் பலன்களைக் கொண்ட அரிய உலோகத்தைக் கண்டறியும் தேடலில், பேராசிரியர் மயில்வாகனமும் (சச்சின் கடேகர்) அவரது உதவியாளர் இந்திரஜித்தும் (கௌதம் கார்த்திக்) தொலைதூரக் காட்டுக்குள் செல்ல ஒரு சுவாரஸ்யமான பயணத்தை மேற்கொள்கின்றனர். அவர்களின் இந்த தேடல் பயணம் வில்லனால் (சுதன்ஷு பாண்டே ) ஒரு கட்டத்தில் தடைபடுகிறது.
இறுதியில் அந்த அரிய வகை உலோகத்தை இந்திரஜித் மற்றும் மயில்வாகனம் கண்டுபிடித்தார்களா? இல்லையா? மற்றும் தனது செல்வாக்கை பயன்படுத்தி உலோகத்தை அடைய துடிக்கும் வில்லனிடம் இருந்து தப்பித்தார்களா போன்ற பல சுவாரஸ்யமான திருப்பங்களுடன் இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
நடிகர் கௌதம் கார்த்திக் இத்திரைப்படம் குறித்து பேசுகையில், “இந்த திரைப்படம் எடுக்கப்பட்ட விதமும் மற்றும் நடித்த நாட்களும் அற்புதமான தருணம் ஆகும். இந்த திரைப்படத்தின் சுவாரஸ்யமான கதைகளமும், கலைஞர்களின் நடிப்பும் அனைத்து பார்வையாளர்களையும் தன்வசப்படுத்திக்கொள்ளும். புத்துணர்ச்சியூட்டும் அறிவியல் சார்ந்த இக்கதை, பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் நிச்சயமாக மகிழ்விப்பது மட்டுமின்றி கதைகுள்ளேயே அழைத்துச் செல்லும் என நம்புகிறேன்.
படம் குறித்து பேசிய பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவின் மகன், இயக்குனர் கலாபிரபு, “பார்வையாளர்கள் இந்திரஜித் திரைப்படத்தை தியேட்டரில் கண்ட அனுபவத்தை மீண்டும் மக்களுக்கு கலர்ஸ் தமிழின் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பு செய்வது எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.
இது கண்டிப்பாக பார்வையாளர்களை முற்றிலும் மாறுபட்ட த்ரில் மற்றும் சாகச உலகிற்கு அழைத்துச் செல்லும். பிரபலமான பல நபர்கள் நடித்த இந்த சுவாரஸ்யமான கதையை தொல்லியல் மற்றும் சாகசங்களை ஒருங்கிணைத்து முழு அளவிலான பொழுதுபோக்கு அம்சமாக்க இப்படத்தின் குழுவினர் நேர்த்தியாக வெளி காட்டியுள்ளனர் என்று நம்புகிறேன்.
இது யுவனின் மேஜிக் - வீடியோ பகிர்ந்து வெங்கட் பிரபு நெகிழ்ச்சி
இந்த அதிரடி சாகசத்தை அனுபவிக்க இந்த ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 12, 2023, மதியம் 2:00 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை ட்யூன் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.