ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

என் வேலை முடிந்தது... பத்து தல படம் குறித்து புதிய அப்டேட் வெளியிட்ட கௌதம் கார்த்திக்!

என் வேலை முடிந்தது... பத்து தல படம் குறித்து புதிய அப்டேட் வெளியிட்ட கௌதம் கார்த்திக்!

கௌதம் கார்த்திக்

கௌதம் கார்த்திக்

பத்து தல படம் கன்னடத்தில் வெளியான முப்தி படத்தின் தமிழ்ரீமேக். ஷிவ ராஜ்குமார், ஸ்ரீமுரளி கன்னடப் படத்தில் நடித்திருந்தனர்.படம் அங்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் கௌதம் கார்த்திக் 'பத்து தல' படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளதாக தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

பத்து தல படம் கன்னடத்தில் வெளியான முப்தி படத்தின் தமிழ் ரீமேக். ஷிவ ராஜ்குமார், ஸ்ரீமுரளி கன்னடப் படத்தில் நடித்திருந்தனர்.படம் அங்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அறிமுக இயக்குனர் நார்த்தன் படத்தை இயக்கியிருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தை தமிழில் 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' போன்ற படங்களை இயக்கிய ஓபேலி கிருஷ்ணா இயக்குகிறார்.

கொரோனா இரண்டாம் அலைக்கு பின் ஊரங்கு விலக்கிக் கொண்டபின் பத்து தல படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. கௌதம் கார்த்திக் சம்மந்தப்பட்ட காட்சிகள் முதலில் படமாக்கப்பட்டது. அவர் இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாகவும் சிம்பு ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

Also read... பொது இடத்தில் ஆபாச வீடியோ.. உடையில் எல்லை மீறிய நடிகை உர்பி ஜாவேத் .. கைது செய்த போலீஸ்!

சிம்பு மற்றும் கெளதம் கார்த்திக் உடன் கலையரசன், பிரியா பவானி சங்கர், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை படக்குழு அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் கௌதம் கார்த்திக் 'பத்து தல' படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Gautham karthik