எழில் இயக்கத்தில் இணைந்த பார்த்திபன் - கவுதம் கார்த்திக்

எழில் இயக்கத்தில் உருவாகவிருக்கும் க்ரைம் த்ரில்லர் ஜானர் படத்தில் பார்த்திபன் - கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்க உள்ளனர்.

எழில் இயக்கத்தில் இணைந்த பார்த்திபன் - கவுதம் கார்த்திக்
இயக்குநர் எழில் உள்ளிட்ட படக்குழு
  • Share this:
‘துள்ளாத மனமும் துள்ளும்’ தொடங்கி பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய திரைப்படங்களை இயக்கி வெற்றி பெற்ற இயக்குநர் எழில். முதன்முறையாக நாவலாசிரியர் ராஜேஷ்குமாரின் க்ரைம் திரில்லர் கதையை படமாக்குகிறார்.

காவ்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டி.விஜய்குமரன் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் ராதாகிருஷ்ணன் பார்த்திபன், கௌதம் கார்த்திக், சாய் ப்ரியா தேவா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்க, குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத நிலையில் ‘புரடக்‌ஷன் நம்பர் 2’ என்று தற்காலிகமாக அழைக்கப்படுகிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நவம்பர் 19-ம் தேதி தொடங்கியது.

படம் குறித்து தயாரிப்பாளர் டி. விஜய்குமரன் கூறுகையில், “படத்தின் நட்சத்திர நடிகர்கள் குழுவே படம் ஒரு மிக அழுத்தமான காமெடி கலக்கலாக, தியேட்டரில் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும் என்பதை அடித்து கூறுவதாக இருக்கிறது.


இயக்குநர் எழில் பொழுதுபோக்குடன் கூடிய கமர்ஷியல் சினிமாக்களை ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் தருவதில் வல்லவர். விநியோக தளத்தில் பெரிய அளவில் அவர் கொண்டாப்பட அதுவே முக்கிய காரணமாக இருந்து வருகிறது. தமிழின் தலைசிறந்த நாவலாசிரியரான ராஜேஷ்குமாருடைய கதையில் முதன்முறையாக தனது திரைப்பயணத்தில் க்ரைம் திரில்லர் ஜானரில் இந்தப் படத்தை இயக்குநர் எழில் இயக்குகிறார்.ஒரு தயாரிப்பாளராக பெரு மகிழ்ச்சியுடனும் இத்திரைப்படம் மாபெரும் வெற்றிபெறும் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கையுடனும் உள்ளேன். அதிலும் தமிழ் சினிமாவில் தங்கள் தனித்திறமையால் போற்றப்படும் நடிகர்களான ராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிப்பது, உலகளவில் அனைத்து ரசிகர்களையும் கண்டிப்பாக கவரும். அவர்களின் பலம் படத்தை பெரு வெற்றி பெறச் செய்யும் என உறுதியாக நம்புகிறேன்.” என்று கூறியுள்ளார்.
First published: November 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading