முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மனைவி மஞ்சிமா மோகனுடன் பழனி முருகன் கோயிலில் தரிசனம் செய்த கௌதம் கார்த்திக்!

மனைவி மஞ்சிமா மோகனுடன் பழனி முருகன் கோயிலில் தரிசனம் செய்த கௌதம் கார்த்திக்!

நடிகர் கெளதம் கார்த்திக், நடிகை மஞ்சிமா மோகன்

நடிகர் கெளதம் கார்த்திக், நடிகை மஞ்சிமா மோகன்

பழனி முருகன் கோவிலில் நேற்று நடிகை சமந்தா சாமி தரிசனம் செய்ய வந்த நிலையில் இன்று நடிகர் கெளதம் கார்த்திக், நடிகை மஞ்சிமா மோகன் தம்பதி சாமி தரிசனம் செய்தனர்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடிகர் கௌதம் கார்த்திக் மனைவி மஞ்சிமா மோகனுடன் சாமி தரிசனம் செய்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நேற்று வருகை தந்த நடிகை சமந்தா, படிப்பாதை வழியாக  600க்கும் மேற்பட்ட படிகளில்  சூடம் ஏற்றி கொண்டு பழனி  மலை  கோவில் மேலே வந்து , ஆனந்த விநாயகரை வணங்கி விட்டு, பின்னர்  ராஜ அலங்காரத்தில் முருகனை சாமி தரிசனம் செய்தார்.

இந்நிலையில் இன்று பழனி முருகன் கோவிலுக்கு நடிகர் கௌதம் கார்த்திக் மனைவி மஞ்சிமா மோகன் உடன் வருகை தந்தார். மலையடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலமாக கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் சாமி தரிசனம் செய்ய மலை மீது சென்றனர்.

மலை மீது சென்ற கௌதம் கார்த்திக்கை பார்த்து பக்தர்கள் பலரும் புகைப்படம் எடுக்க திரண்டனர். இந்த நிலையில் விரைவாக சாமி தரிசனம் செய்ய கௌதம் கார்த்திக் அழைத்து செல்லப்பட்டார். பின்னர் கோயில் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட பிரசாதத்தை பெற்றுக்கொண்டு மலைமீது இருந்து கீழே இறங்கி புறப்பட்டுச் சென்றார். பழனி முருகன் கோயில் குடமுழுக்கு நிறைவடைந்த பிறகு அடுத்தடுத்து சினிமா நடிகர்கள் வருகை அதிகரிக்க துவங்கியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actress Manjima Mohan, Gautham Karthik