ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மலேசிய பல்கலைக்கழகத்தில் கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற நடிகை கெளதமி

மலேசிய பல்கலைக்கழகத்தில் கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற நடிகை கெளதமி

கெளதமி

கெளதமி

கௌதமி தமிழில் கடைசியாக 2015-ல் கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' படத்தில் நடித்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மலேசியாவின் ஆசிய மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்தில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார் நடிகை கெளதமி.

தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் தங்கள் அர்ப்பணிப்பு மிகுந்த சேவைக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளனர். அதோடு சினிமா துறையில் சிறந்து விளங்கியதற்காக கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற பலர் உள்ளனர். தற்போது நடிகை கெளதமி மலேசியாவின் ஆசிய மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்தில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

அவர் ஆரோக்கியம் மற்றும் சமூக சேவையில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். டாக்டர் பட்டம் பெற்ற நிகழ்வின் படங்களைப் பகிர்ந்து கொண்ட கௌதமி, "மலேசியாவின் ஆசிய மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகத்தில் ஆரோக்கியம் மற்றும் சமூக சேவைக்கான கெளரவ டாக்டர் பட்டம் பெற்றதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த அங்கீகாரம் என்னை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக உள்ளது. உழைத்து உயர்ந்த இலக்கை அடையுங்கள். அன்புடனும் ஆதரவுடனும் எனது பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். ஆசியா மெட்ரோபொலிடன் பல்கலைக்கழகத்திற்கும், ஆசிய பெருநகரப் பல்கலைக்கழகத்தின் தலைவர், வாரியம் மற்றும் ஆசிரியர்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. எதிர்காலத்திற்கான கல்வி மற்றும் வாழ்க்கையை வடிவமைப்பதில் அவர்களின் பங்கு அளப்பறியது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Year Ender 2022: கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய படங்கள்!

கௌதமி தமிழில் கடைசியாக 2015-ல் கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' படத்தில் நடித்தார். விஷால் நடித்த 'துப்பறிவாளன் 2' படத்தில் அவர் நடிக்கவிருந்த நிலையில், அது தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதோடு 'சாகுந்தலம்' மற்றும் 'அன்னி மஞ்சி சகுனமுலே' ஆகிய இரண்டு தெலுங்கு படங்களிலும் அவர் இடம்பெற்றுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Tamil Cinema